Thursday, June 24
Shadow

News

பத்ம ஸ்ரீ நடிகர் விவேக் காலமானார்!

பத்ம ஸ்ரீ நடிகர் விவேக் காலமானார்!

News
மாரடைப்பு ஏற்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் இன்று காலமானார். அவருக்கு வயது 59. விவேக்கின் மரணம் திரைத்துறையினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திரைப்படப்படப்பிற்காக சமீபத்தில் வட இந்திய மாநிலங்களுக்கு சென்று திரும்பியிருந்தார் விவேக். வெள்ளிக்கிழமை காலையில் அவரது வீட்டில் குடும்பத்தினருடன் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும்போது மயங்கி விழுந்தார். விவேக்கின் மனைவியும் மகளும் உடனடியாக அவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பரிசோதனை முடிவில் ஆஞ்சியோ அறுசை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. அவரது இதயத்தில் 100 சதவிகித அடைப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. விவேக்கிற்கு மூச்சுத்திணறலும் இருப்பதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. விவேக்கிற்கு தொடர் சிகிச்சை அளி...
கொரோனா தடுப்பூசி போட்ட நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு !

கொரோனா தடுப்பூசி போட்ட நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு !

News
நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் இன்று நடிகர் விவேக் அவர்களுக்கு மாரடைப்பு ! நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிநகைச்சுவை நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
கர்ணனுக்காக காதை அறுத்த தனுஷ் ரசிகர்கள்!

கர்ணனுக்காக காதை அறுத்த தனுஷ் ரசிகர்கள்!

News
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கர்ணன் படம் பார்க்க சென்ற ரசிகர்கள், ஓட்டலில் ஆர்டர் செய்த தோசையை வேறு ஒருவருக்கு கொடுத்ததால் ஊழியரின் காதை கத்தியால் அறுத்த விபரீதம் அரங்கேறி இருக்கின்றது. நாகப்பட்டினம் அடுத்துள்ள வெளிப்பாளையம் தேவி திரையரங்கில் கர்ணன் படம் பார்க்க சென்ற ரசிகர்கள் இருவர் அருகில் உள்ள கலா என்ற ஓட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளனர். கர்ணன் படம் ஆரம்பிப்பதற்குள் தோசை சாப்பிட்டு விட்டு செல்லும் திட்டத்துடன் ஓட்டல் உரிமையாளர் மோகனிடம் விரைவாக தோசை கொண்டுவரச்சொல்லி ஆர்டர் செய்துள்ளனர். அப்போது தோசையை கொண்டு வந்த சப்ளையர் வேறு ஒரு டேபிலில் அமர்ந்திருந்தவர்களுக்கு தோசையை பறிமாரியதாக கூறப்படுகிறது. படம் ஆரம்பித்து விடுவார்கள் என்று சொல்லியும் எப்படி தோசை பக்கத்து டேபிளுக்கு சென்றது என்று ஆத்திரத்தில் கடை ஊழியரிடம் வாக்கு வாதம் செய்துள்ளனர். அத்தோடில்லாமல் தாங்கள் ஆர்டர் செய்த தோசையை...
எடப்பாடி அறிவித்த அரியர் தேர்வுகள் ஆல் பாஸ் செல்லாது, உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

எடப்பாடி அறிவித்த அரியர் தேர்வுகள் ஆல் பாஸ் செல்லாது, உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

News
எடப்பாடி அறிவித்த ஆல் பாஸ் செல்லாது என்றும் தமிழகத்தில் அரியர் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் நடத்தப்பட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் 8 வாரத்திற்குள் நடத்தப்படும் கொரோனா பரவல் காரணமாக அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டது அரசாணையை ரத்து செய்யக்கோரி அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி வழக்கு. ...
கர்ணன் படம் ஓடும் தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீச்சு!

கர்ணன் படம் ஓடும் தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீச்சு!

News
தூத்துக்குடியில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் சமீபத்தில் வெளியான கர்ணன் படம் திரையிடப்பட்டு உள்ளது. இந்த படத்தை பார்ப்பதற்காக நேற்றுமுன்தினம் இரவு 10.15 மணிக்கு 5 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் சினிமா டிக்கெட் எடுத்து இருந்தனர். ஆனால் அவர்கள் மது குடித்து இருந்ததால், தியேட்டருக்குள் செல்ல ஊழியர்கள் அனுமதி மறுத்தனர். தொடர்ந்து அவர்களிடம் டிக்கெட்டுக்கான பணத்தையும் திருப்பி கொடுத்து வெளியேற்றினர். இதனால் ஆத்திரம் அடைந்த 5 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர். பின்னர் படம் திரையிடப்பட்டது. படம் ஓடிக் கொண்டிருந்தபோது, அந்த 5 வாலிபர்களும் மீண்டும் தியேட்டருக்கு வந்தனர். அவர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை தியேட்டருக்குள் வீசினர். அந்த பெட்ரோல் குண்டு, தியேட்டர் வளாகத்தில் விழுந்து வெடித்து சிதறியது. பின்னர் 5 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுற...
டெல்லி வீரர் அன்ரிச் நார்ட்ஜிக்கு கொரோனா பாதிப்பு!

டெல்லி வீரர் அன்ரிச் நார்ட்ஜிக்கு கொரோனா பாதிப்பு!

News
ஐ.பி.எல் 2021: டெல்லி வீரருக்கு கொரோனா பாதிப்பு!டெல்லி அணியின் வேகப் பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ட்ஜிக்கு ( டெல்லி வீரர் ) கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரவத்தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போதுவரை தொடர்ந்துவருகிறது. இதுவரையில் இல்லாத புதிய உச்சமாக ஒரு நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.84 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுவருகின்றன. இருப்பினும், முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. பிரபலங்கள் பலருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுவருகிறது. கொரோனா முதல் அலையில் பாதிக்கப்படாத பலரும் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். சமீபத்தில் சச்சின் டெண்டுல்கர், அமீர் கான், ஆலியா பட், ரன்வீர் கபூர் உள்ளிட்ட இந்தி திரைப்பி...
வீரர் விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய பாக்கிஸ்தான் வீரர்! Babar Azam

வீரர் விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய பாக்கிஸ்தான் வீரர்! Babar Azam

News
ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் முதலிடம் இந்திய வீரர் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி பாபர் அசாம் முதலிடம் ICC | #BabarAzam | #ViratKohli
போயஸ் கார்டனில் சசிகலா புதிய இல்லம்!

போயஸ் கார்டனில் சசிகலா புதிய இல்லம்!

News
சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு இல்லத்திற்கு எதிர்ப்புறம் சசிகலா பிரமாண்டமான வீடு ஒன்றைக் கட்டி வருகிறார்( சசிகலா புதிய இல்லம் ). அந்த இல்லத்தின் கட்டுமானப்பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. இந்நிலையில் இன்று பிற்பகல் போயஸ் கார்டன் சென்ற சசிகலா, இளவரசி மற்றும் விவேக் ஆகியோர் இல்லத்தின் கட்டுமான பணிகளை நேரடியாக பார்வையிட்டனர். இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இந்த இல்லத்தை பார்வையிட்ட சசிகலா அதன் பின்னர் புறப்பட்டு சென்றார். ...
கள்ள ஓட்டு போடவந்த பாமக! தட்டி கேட்ட அமமுக!

கள்ள ஓட்டு போடவந்த பாமக! தட்டி கேட்ட அமமுக!

News
கள்ள ஓட்டு போடவந்த பாமகவினரை தட்டி கேட்ட அமமுகவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள டிடிவி தினகரன், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இன்று தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது. மேலும், சில இடங்களில் கள்ள ஓட்டுகள் போடும் முயற்சிகளும் நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நெமிலி பேரூராட்சி வாக்குச்சாவடி எண் 221 மற்றும் 223-ல் சிலர் கள்ள ஓட்டுகளைப் போட முயன்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அந்த வாக்குச்சாவடிகளில் அரசியல் கட்சியினருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தைக் க...
2021 சட்டமன்றத் தொகுதி கருத்து கணிப்பு முடிவுகள்

2021 சட்டமன்றத் தொகுதி கருத்து கணிப்பு முடிவுகள்

News
கருத்து கணிப்பு. தமிழகத்தில் நீங்கள் எந்த தொகுதியை சார்ந்தவர். கருத்து கணிப்பு முடிவுகள் 2021 சட்டமன்றத் தொகுதி கருத்து கணிப்பு முடிவுகள் 1. கும்மிடிப்பூண்டிஅதிமுக கூட்டணி 61 %திமுக கூட்டணி 20 %அமமுக கூட்டணி 9 %நாம் தமிழர் 8 %மநீம கூட்டணி 2 % 2. பொன்னேரிஅதிமுக கூட்டணி 32 %திமுக கூட்டணி 42 %அமமுக கூட்டணி 9 %நாம் தமிழர் 11 %மநீம கூட்டணி 6 % 3. திருத்தணிஅதிமுக கூட்டணி 36 %திமுக கூட்டணி 46 %அமமுக கூட்டணி 11 %நாம் தமிழர் 5 %மநீம கூட்டணி 2 % 4. திருவள்ளூர்அதிமுக கூட்டணி 31 %திமுக கூட்டணி 39 %அமமுக கூட்டணி 6 %நாம் தமிழர் 18 %மநீம கூட்டணி 6 % 5. பூந்தமல்லிஅதிமுக கூட்டணி 36 %திமுக கூட்டணி 28 %அமமுக கூட்டணி 10 %நாம் தமிழர் 21 %மநீம கூட்டணி 5 % 6. ஆவடி...