கேரளாவில் நாய்க்கு ஏற்பட்ட பரிதாபம், டேப்பை அவிழ்த்ததும் 2 லிட்டர் தண்ணீர் குடித்தது!

Views : 850

சமீபத்தில் கேரளாவில் கர்ப்பிணி யானை ஒன்று வெடிபொருள் நிரம்பிய தேங்காயை சாப்பிட்டதால், வாயில் படுகாயமடைந்து உயிரிழந்தது. இந்த துயர சம்பவத்தின் வடு ஆறுவதற்குள் கேரளாவில் மற்றோரு விலங்குக்கு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.


இந்த முறை அவர்களிடத்தில் தெரு நாய் சிக்கியுள்ளது. இரண்டு வாரங்களுக் முன் திருச்சூர் விலங்குகள் நல அமைப்புக்கு போன் வந்துள்ளது அதில், ஒல்லூர் பகுதியில் தெருநாய் ஒன்றின் வாயில் யாரோ டேப் ஓட்டி விட்டுள்ளதால், அதனால் சாப்பிட முடியாமல் தவிப்பதாக தகவல் சொல்லப்பட்டது.


விலங்குகள் நல வாரிய உறுப்பினர்கள் அந்த நாயை தேடி அலைந்தனர். பல நாள்கள் கழித்து இப்போதுதான் நாய் கண்டுபிடிக்கப்பட்டது. நாயின் வாயை சுற்றி பல அடுக்குகளாக பலமாக டேப் ஒட்டப்பட்டிருதுந்தது. இதனால், நாயால் வாயை திறக்க முடியவில்லை. உணவு சாப்பிட முடியாமல் தவித்துள்ளது.


டேப் அழுத்தி ஒட்டப்பட்டதால், அதன் நாசி எழும்புகள் முறிந்து போயுள்ளன. வாயின் மேமே தோல் பகுதியிலும் ஆழகமான காயம் ஏற்பட்டுள்ளது. விலங்குகள் நல அமைப்பினர் நாயை மீட்டு அதன் வாயிலிருந்த டேப்பை கழற்றினர். வாயிலிருந்த டேப்பை கழற்றியதும் சுமார் 2 லிட்டர் தண்ணீரை அந்த நாய் குடித்ததாக விலங்குகள் நல அமைப்பின் செயலாளர் ராமச்சந்திரன் நியூஸ்மினிட் இணையதளத்திடம் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.


மேலும், ராமச்சந்திரன் கூறுகையில், உணவு , தண்ணீர் இல்லாமல் நாய்களால் சில வாரங்கள் வாழமுடியும். தற்போது, கால்நடை மருத்துவமனையில் அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாயின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தயவுசெய்து விலங்குகளை துன்புறுத்தாதீர்கள் என்றார்.


நாய் குரைத்ததால், யாரோ அதன் வாயில் டேப்பை ஒட்டியுள்ளதாக தெரிகிறது.


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


அதிமுக பொதுச்செயலாளர் பதவி சசிகலா வசம்! முதல்வர் பதவியில் எடப்பாடி!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp