ஜி.பி முத்துவை மொத்திய போலீஸ்..! டிக்டாக்கைவிட்டே செல்வதாக கதறல்!

Views : 1290

தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட சாதி பெண்களை இழிவுபடுத்தும் விதமாக, தனது மகளை கட்டாயப்படுத்தி வீடியோ எடுத்து டிக்டாக்கில் பதிவிட்ட ஜி.பி.முத்து காவல்துறையினரிடம் சிக்கினார். காவல் நிலையத்தில் கிடைத்த ஞானோதயம் காரணமாக சீன நாட்டு செயலியான டிக்டாக்கை தூக்கி எறிந்த பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு


சீன நாட்டின் டிக்டாக் ஆப்புக்கு அடிமையானதால் குடும்பத்தினரால் வீட்டை விட்டு விரட்டும் நிலைக்கு தள்ளப்பட்ட மரக்கடை அதிபர் ஜி.பி. முத்து இவர்தான்.


தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த ஜி.பி.முத்து, மரக்கடை வேலைக்கு செல்லாமல் டிக்டாக் மீட் என்று ஊர் ஊராக சுற்றி வந்ததாக கூறப்படுகின்றது.


இதனால் குடும்பத்தில் உருவான பிரச்சனையில் மனைவி குழந்தைகள், இவரை டிக்டாக் பைத்தியம் என்று விமர்சித்து வீட்டை விட்டு விரட்டுவதாக அவரே ஒரு வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்.


அந்த வீடியோவின் இறுதியில் சிறுமியான தனது மகளை கட்டாயப்படுத்தி, வீடியோ எடுத்து அதில் தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட சாதி பெண்களின் முகபாவனையை இழிவுபடுத்தும் விதமாக பேசி இருந்தார்.


இதையடுத்து அந்த குறிப்பிட்ட சமுதாயம் சார்பில், மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த வினோ என்பவர் முதலமைச்சரின் தனிபிரிவுக்கு டிக்டாக்கர் ஜி.பி.முத்து மீது புகார் தெரிவித்து மனு அனுப்பி இருந்தார்.


இதனையடுத்து, புதன்கிழமை காலையில் குலசேகரப்பட்டினம் போலீசார் உடன்குடியில் மரக்கடையில் அமர்ந்து டிக்டாக் செய்து கொண்டிருந்த ஜி.பி.முத்துவை, பிடித்து காவல் நிலையம் அழைத்துச்சென்றனர். ஜி.பி.முத்துவின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.


விசாரணையில் தான் குறிப்பிட்ட சாதி குறித்து உள் நோக்கம் ஏதுமின்றி யதார்த்தமாக பேசிவிட்டதாகவும், இனிமேல் குழந்தைகளை வைத்து மட்டுமல்ல, எந்த வீடியோவையும் டிக்டாக்கில் பதிவேற்றம் செய்ய மாட்டேன் என கதறியுள்ளார் ஜி.பி.முத்து.


காலையில் இருந்து இரவுவரை காவல் நிலையத்திலேயே வைத்து சிறப்பாக கவனிக்கப்பட்டதால் டிக்டாக்கின் தீமைகளை உணர்ந்து ஜி.பி.முத்து, மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்ததை தொடர்ந்து குடும்ப சூழ்நிலை கருதி அவரை, போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகின்றது.


இந்திய எல்லையில் அத்துமீறி அட்டகாசம் செய்யும், சீனராணுவத்தை கண்டிக்கும் விதமாக சீன நாட்டு செயலிகளை இந்தியர்கள் புறக்கணிக்கத் தொடங்கியுள்ள நிலையில், காவல் நிலையத்தில் ஞானோதயம் பெற்ற ஜி.பி.முத்து போல, அதனை பயன்படுத்துவோர் டிக்டாக்கை தூக்கிய எறிய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


பாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp