நடிகையிடம் உல்லாசமாக இருந்த நடிகர் !! நடிகையின் புகாரால் கைது !!

Views : 62

கடந்த சில நாட்களுக்கு முன் தெலுங்கு நடிகை ஒருவர், தன்னைத் திருமணம் செய்வதாக ஆசைக்காட்டி ஏமாற்றியதாக ஒளிப்பதிவாளர் மீது புகார் கூறியிருந்தார். இந்நிலையில் இப்போது நடிகை ஒருவர், நடிகர் மீது புகார் கொடுத்துள்ளார்.

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 32 வயது பெண் அவர். சசிகுமார் நடித்த படம் ஒன்றில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அவர் மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்தப் புகாரில் அவர் கூறி இருப்பதாவது ; நான் சினிமாவில் நடித்து வருகிறேன். எனக்கு, தரிசு நிலம் என்ற படத்தில் நடித்துள்ள சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்த தியாகராஜன் (32) என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது. நட்பாக பழகினோம்.

பின்னர் இருவரும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தோம். அவர் சென்னை மாநகராட்சியில் வேலை செய்கிறார். 2011-ம் ஆண்டு முதல் எங்கள் காதல் தொடர்ந்து வந்தது. அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி வந்தார்.

இதனால் நான் அவருடன் நெருங்கி பழகி வந்தேன். இதையடுத்து நாங்கள் பல முறை உல்லாசமாக இருந்தோம். இந்நிலையில் தியாகராஜன் என்னை சந்திப்பதைத் தவிர்த்து வந்தார். அவர் நடவடிக்கையில் சந்தேகம் வந்தது. இதுபற்றி பேசினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி வருகிறார்.

திருமணம் செய்வதாக ஆசைக்காட்டி மோசம் செய்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து பாலியல் வன்கொடுமை, நம்பிக்கை மோசடி மற்றும் கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் தியாகராஜன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட தியாகராஜன் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.






Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


பாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp