புகார் கொடுக்க போன நர்ஸை.. பலவந்தப்படுத்தி.. கர்ப்பமாகி.. அபார்ஷனும் செய்த எஸ்ஐ!

Views : 293

புகார் கொடுக்க சென்ற இளம் பெண்ணை பலாத்காரம் செய்து.. அடுத்த சில மாதங்களில் அபார்ஷனும் செய்து விட்டாராம் ஒரு எஸ்.ஐ... இந்த கொடுமை கன்னியாகுமரியில் நடந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் திருமதி ஜோஸ்பின்... இவர் திருவனந்தபுரத்தில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.

இவரை மேக்கோடு பகுதியை இளைஞர் ஒருவர் காதலித்து ஏமாற்றி உள்ளார்.. அத்துடன் பணமோசடியும் செய்திருக்கிறார்.

இந்த மோசடி குறித்து புகார் தருவதற்காக பளுகல் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார்.. அங்கே சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரலிங்கம் இருந்தார். புகாரை பெற்று கொண்டு, ஜோஸ்பின் குறித்த விவரங்கள் கேட்டார்.. இளம்பெண் தனியாக தவிப்பதை அறிந்த சுந்தரலிங்கம் தான் குடியிருக்கும் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு ஏற்பாடு செய்து தந்து குடியமர்த்தினார்.

பிறகு ஆறுதல் சொல்வது போல அடிக்கடி அந்த வீட்டுக்கு சென்று பெண்ணை பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதில் ஜோஸ்பின் கர்ப்பமாகிவிட்டார்.. இதை சுந்தரலிங்கத்திடம் சொல்லி உள்ளார்.. சுந்தரலிங்கமோ அந்த பெண்ணை அபார்ஷன் செய்துவிடும்படி சொல்லி உள்ளார்.

அதற்கு ஜோஸ்பின் மறுக்கவும், கட்டாயப்படுத்தி குலசேகரம் அருகே தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று அபார்ஷன் செய்ய வைத்துள்ளார். அப்போது ஜோஸ்பின் சத்தம் போடவும், பொதுமக்கள் கூட தொடங்கினர்.. உடனே சுந்தரலிங்கம் தப்பி ஓடிவிட்டாராம்.. பிறகு ஜோஸ்பின் இதை பற்றி பலமுறை போலீசில் புகார் தந்துள்ளார் போலும்.

ஆனால் உரிய நடவடிக்கை எடுக்காததால், கலெக்டர் ஆபீசுக்கு வந்து புகார் தந்ததுடன், உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டார். தன் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்றும் முறையிட்டார்..இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.. பெண் அளித்த இந்த புகாரின் பேரில் கலெக்டர் உத்தரவிட்டதையடுத்து போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.

புகார் கொடுக்க போன நர்ஸை.. பலவந்தப்படுத்தி.. கர்ப்பமாகி.. அபார்ஷனும் செய்த எஸ்ஐ!


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


பாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp