அதிகார அத்துமீறல் முடிவுக்கு வரவேண்டும்! - நடிகர் சூர்யா

Views : 113

சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழப்பிற்கு எதிராக நடிகர் சூர்யா அதிகார அத்துமீறல் முடிவுக்கு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகார அத்துமீறல் முடிவுக்கு வரவேண்டும்!மன்னிக்க முடியாத குற்றங்களைச் செய்தவர்களுக்குகூட மரண தண்டனைகூடாது என்று மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துகின்றன.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில், இரு அப்பாவி உயிர்களுக்கு மரணம் ஏற்படுத்தும்அளவிற்கு நிகழ்ந்த போலிஸாரின் லாக்கப் அத்துமீறல் காவல் துறையின்மாண்பை குறைக்கும் செயல். இது ஏதோ ஒரு இடத்தில் தவறி நடந்த சம்பவம் என்று கடந்து செல்ல முடியாது,போலீஸாரால் கொடூரமான தாக்குதலுக்கு ஆளான தந்தை ஜெயராஜ், மகன்ஃபென்னிக்ஸ் இருவரையும் அரசு மருத்துவர் பரிசோதனை செய்து, நலமாகஇருப்பதாக சான்று அளித்திருக்கிறார்.

நீதியை நிலைநாட்ட வேண்டிய மாஜிஸ்ட்ரேட், பாதிக்கப்பட்டவர்களின் நிலையை பரிசோதிக்காமல், இயந்திர கதியில் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். சிறையில் நடத்தப்பட வேண்டிய சோதனைகளும் முறையாக நடக்கவில்லை. இத்தகைய கடமை மீறல் செயல்கள், ஒரு குடிமகனின் உரிமையில் நம்அதிகார அமைப்புகள் காட்டும் அலட்சியத்தை வெளிச்சம் போட்டுகாட்டுகின்றன. அதனால் இதுபோன்ற துயர மரணங்கள் ஒரு வகையான திட்டமிடப்பட்ட குற்றமாக (organised crime) நடக்கிறது.ஒருவேளை இருவரின் மரணம் நிகழாமல் போயிருந்தால், போலீஸாரின்இந்தக் கொடூர தாக்குதல் நம் கவனம் பெறாமலேயே போயிருக்கும்.பாதிக்கப்பட்டவர்கள் சிறையிலிருந்து வெளியே வந்தாலும், போலிஸாரை எதிர்த்தால் என்ன நடக்கும் என்பதற்கான வாழும் சாட்சியாகி இருப்பார்கள். தங்கள் மரணத்தின் மூலம் தந்தை மகன் இருவரும் இந்தச் சமூகத்தின்மனச்சாட்சியை உலுக்கி இருக்கிறார்கள்.


இந்த கொடூர மரணத்தில்,தங்களுடைய கடமையை செய்யத் தவறிய அனைவரும் நீதியின் முன்நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்துவழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துவது, நீதி கிடைக்கும் என்கிறநம்பிக்கையை அளிக்கிறது, இதேபோல, தவறு செய்கிறவர்கள் யாராக இருந்தாலும் தண்டனையில்இருந்து தப்பிக்க முடியாது என்கிற நம்பிக்கையை அரசாங்கமும், நீதிஅமைப்புகளும் மக்களிடம் உருவாக்க வேண்டும். மாறாக, நமது அதிகாரஅமைப்புகள் அவநம்பிக்கையையே ஏற்படுத்துகின்றன.இரண்டுஅப்பாவிகளின் மரணத்திற்குப் பிறகும், உடனடியாக எடுக்கப்படுகிறநடவடிக்கை, சம்பந்தப்பட்ட போலீஸாரை ஆயுதபடைக்கு மாற்றம் செய்வதுமட்டுமே. ஆயுதப்படையில் பணியாற்றுவது என்பது, தண்டனை காலபணியாக பொதுமக்கள் மத்தியில் ஒரு பிம்பத்தை இது உருவாக்குகிறது.இரண்டு உயிர் போவதற்கு காரணமானவர்களுக்கு இதுதான் தண்டனையா?என்று எழுந்த விமர்சனத்திற்குப் பிறகே, சம்பந்தப்பட்ட போலீஸார்பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

காவல்துறையில் அர்ப்பணிப்புடன் தன் கடமையை செய்கிற பலரைதனிப்பட்ட முறையில் நன்கு அறிவேன். ஒட்டு மொத்த நாடும் இயங்கமுடியாமல் ஸ்தம்பித்து நிற்கிற இந்த நேரத்திலும் ஓய்வில்லாமல் மக்களின்நலனுக்காக காவல்துறையினர் உழைக்கின்றனர். கொரானா யுத்தத்தில்களத்தில் முன் வரிசையில் நிற்கிற காவல்துறையினருக்குதலைவணங்குகிறேன். அதேநேரம், அதிகாரத்தை பொதுமக்களுக்கு எதிராகபயன்படுத்தும் காவல்துறையினருக்கு எனது கடும் கண்டனங்கள். அதிகாரஅத்துமீறல் வன்முறையால் ஒருபோதும் மக்களின் மனதை வெல்ல முடியாது.

அன்பும், அக்கறையும் கொண்டு கடமையை செய்கிற காவல்துறையினரேமக்களின் மனதில் நிலைத்து நிற்கிறார்கள்.ஒரே நேரத்தில் இரண்டு உயிர்கள் பலியாகி இருப்பது, ஒரு குடும்பத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. தந்தையையும், மகனையும் இழந்து வாடுகிற அந்தகுடும்பத்தினரின் துயரத்தில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன்.

இனிமேலும் இதுபோன்ற அதிகார வன்முறைகள் காவல்துறையில்நிகழாமல் தடுக்க, தேவையான மாற்றங்களை, சீர்திருத்தங்களை அரசும்,நீதிமன்றமும், பொறுப்பு மிக்க காவல் அதிகாரிகளும் ஒருங்கிணைந்துமேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

குற்றம்இழைத்தவர்களும், அதற்கு துணை போனவர்களும் விரைவாகதண்டிக்கப்பட்டு நீதி நிலைநிறுத்தப்படும் என்று பொதுமக்களில் ஒருவனாகநானும் காத்திருக்கிறேன்.


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


பாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp