வெப் தொடராக உருவாகும் வீரப்பன் வாழ்க்கை கதை

Views : 99

வீரப்பனின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து வெப் தொடர் ஒன்றை உருவாக்க உள்ளதாக இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் தெரிவித்துள்ளார்.

வெப் தொடராக உருவாகும் வீரப்பன் வாழ்க்கை கதை

சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை மையமாக வைத்து, ஏற்கனவே ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கத்தில் வனயுத்தம் என்ற பெயரிலும், ராம்கோபால் வர்மா இயக்கத்தில் வில்லாதி வில்லன் வீரப்பன் என்ற பெயரிலும் திரைப்படங்களாக வெளிவந்தன. வனயுத்தம் படத்தில் வீரப்பனாக கிஷோரும் போலீஸ் அதிகாரியாக அர்ஜுனும் நடித்திருந்தனர். இந்த படம் தணிக்கை குழுவின் எதிர்ப்பில் சிக்கி பல காட்சிகள் நீக்கப்பட்ட பிறகே திரைக்கு வந்தது.

இந்நிலையில் வீரப்பன் வாழ்க்கை கதையை மையமாக வைத்து வெப் தொடர் ஒன்றை எடுக்கப் போவதாக இயக்குனர் ஏ.எம்.ஆர். ரமேஷ் அறிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறும்போது, வனயுத்தம் படத்தில் வீரப்பனின் வாழ்க்கை கதையை முழுமையாக வெளிப்படுத்த முடியவில்லை. நிறைய காட்சிகளை தணிக்கை குழுவினர் வெட்டி விட்டனர். இதனால் வெப் தொடராக எடுக்க உள்ளேன்.


வெப் தொடருக்கு தணிக்கை இல்லை என்பதால் வீரப்பனின் முழு வாழ்க்கையையும் இந்த தொடரில் கொண்டு வருவேன். காவல்துறை அதிகாரிகள், வீரப்பனுடன் பழகியவர்கள் போன்றோருடன் பேசி நிறைய தகவல்கள் சேமித்து வைத்துள்ளேன். அவை அனைத்தும் இந்த வெப் தொடரில் இடம்பெறும்.

இந்த வெப் தொடரில் வீரப்பன் கதாபாத்திரத்தில் கிஷோர் நடிக்கிறார். மேலும் பலர் நடிக்க உள்ளனர். அடுத்த மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளேன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் இந்த தொடர் வெளிவரும் என்றார்
Veerappans life story in a web series


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


பாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp