மாஸ்க் அணிந்தபடி சொகுசு காரில் வெளியே சென்ற ரஜினிகாந்த்

Views : 78

தர்பார் படத்தை அடுத்து இயக்குநர் சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் மாதத்திலிருந்து ரத்து செய்யப்பட்டது.

இதனிடையே சென்னை திரும்பிய ரஜினிகாந்த், தனது போயஸ் தோட்டத்து வீட்டிலேயே இருந்து வந்தார். கொரோனா பிரச்னை முழுவதும் முடிந்த பின்னர் அண்ணாத்த படப்பிடிப்பை தொடங்கலாம் என்று படக்குழுவிடம் அவர் அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின.

கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தபடியே அமிதாப்பச்சன், சிரஞ்சீவி உள்ளிட்டோருடன் கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தில் நடித்த ரஜினிகாந்த், பிரதமர் சொன்னபடி வீட்டின் வெளியே வந்து விளக்கேற்றியது உள்ளிட்ட ஒரு சிலவற்றிற்காக மட்டுமே வெளியில் தலை காட்டினார்.படிக்க: கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய சகோதரியை டான்ஸ் ஆடி வரவேற்ற இளம்பெண் - வீடியோ

படிக்க: மீண்டு வந்து நன்றி சொல்வேன் - சிகிச்சை பலனின்றி உயிரிழந்த வட்டாட்சியரின் உருக்கும் பதிவை பகிர்ந்து வருந்தும் ஊர்மக்கள்..இந்நிலையில் முதல்முறையாக இன்று மதியம் தனது போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து ரஜினிகாந்த் முகக்கவசத்துடன் கார் ஓட்டிச் செல்லும் புகைப்படம் ஒன்று சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது. அவர் ஓட்டிச் செல்வது லம்போர்கினி என்ற சொகுசு கார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த கொரோனா காலத்தில் ரஜினிகாந்த் முகக்கவசம் அணிந்த புகைப்படம் வெளியாவது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது
Rajinikanth goes out in a luxury car wearing a mask


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


பாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp