கொரோனா நிவாரணம்: ‘மாஸ்டர்’ பிளான் போட்டுள்ள விஜய்!

Views : 39

கொரோனா நிவாரணமாக விஜய் என்ன செய்தார்? சினிமா, அரசியல் துறையினர் தாண்டி, பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வி இது. இதுவரை எதுவும் செய்யாத விஜய், இனிமேல் என்ன செய்யப்போகிறார் என்பதை பிரத்யேகத் தகவல்களுடன் விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

கொரோனாவால் வீட்டில் தவம் இருப்போரை இப்போதும் மகிழ்விப்பது திரைப்படங்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும்தான். கொரோனா அச்சுறுத்தலால் தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. சினிமா, சின்னத்திரை உள்ளிட்ட அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. சினிமா தொழிலாளர்களின் சங்கங்கள் அங்கம் வகிக்கும் ஃபெப்சியில் 18,000 தொழிலாளர்களும், தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 2
ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் என கிட்டத்தட்ட 20,000 தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்கு உள்ளாகியுள்ளது.இவர்களின் அன்றாட வாழ்வாதாரத்துக்கு உதவும் பொருட்டு, திரைத்துறையினர் உதவி செய்ய வேண்டுமென ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கோரிக்கை விடுத்தார். அதை ஏற்று, நடிகர்கள் சிவகுமார், ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ், சிவகார்த்திகேயன், நடிகை நயன்தாரா உள்ளிட்ட பலர் உதவினர். ஃபெப்சிக்கு மட்டுமின்றி, தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கும் ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட சிலர் உதவியுள்ளனர். அஜித், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரும் பிரதமர் மற்றும் முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்.ஆனால் இதுவரை எதற்குமே நிதி வழங்காமல் இருக்கிறார் பாக்ஸ் ஆபீஸ் நாயகனான தளபதி விஜய். அரசுக்கு நிதி வழங்காவிட்டாலும், குறைந்தபட்சம் தான் சார்ந்த சினிமாத்துறைக்குக்கூட விஜய் உதவி செய்யாமல்
இருப்பது, ஆச்சரியத்தையும் கேள்வியையும் ஒருசேர எழுப்பியுள்ளது. மெர்சல் படத்துக்கு 50 கோடி ரூபாய், மாஸ்டர் படத்துக்கு 80 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ள விஜய், அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்துக்கு அதைவிட அதிகமாகத்தான் சம்பளம் வாங்கக் கூடும்.இவ்வளவு சம்பளம் வாங்கும் விஜய்-யால், தாராளமாக உதவி செய்ய முடியாதா என்ன? என எல்லோருக்கும் கேள்வி எழலாம். ஆனால், உதவி செய்வதற்கான மாஸ்டர் பிளானை பக்காவாக விஜய் திட்டமிட்டு வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனைகளால், வருத்தமடைந்துள்ள விஜய், பிரதமர் நிவாரண நிதிக்கோ, முதல்வர் நிவாரண நிதிக்கோ உதவிசெய்ய அவர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அரசின் நிவாரணத்துக்கு உதவிசெய்யாமல், ஃபெப்சி மற்றும் நடிகர் சங்கத்துக்கு மட்டும் உதவி செய்தால், கேள்வி எழலாம். இதனால், தான் சார்ந்த சினிமாத்துறைக்கும் எந்த உதவியும் செய்யாமல் இருக்கிறாரா விஜய் என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படியானால், என்ன செய்யப் போகிறார் விஜய்?ஊரடங்கு முடிந்தபின்பு யாருக்கு என்ன தேவை என்பதை தனது ரசிகர் மன்றங்கள் மூலம் கண்டறிந்து, அவர்கள் வழியாகவே தேவைப்படும் உதவிகளைச் செய்ய முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு கஜா புயலின்போது, இதேபோன்று தனது ரசிகர் மன்றங்களுக்கு காசோலை அனுப்பி, அவர்கள் மூலமாகவே நிவாரண உதவிகளைச் செய்தார் விஜய். தற்போதும் அதே திட்டத்துடன்தான் இருக்கிறார்
என்கிறார்கள், விஜய்க்கு நெருக்கமானவர்கள். தற்போது விஜய் மக்கள் இயக்கத்தினர் ஒவ்வொரு ஊரிலும் செய்து வரும் உதவிக்கும் நடிகர் விஜய்தான் பணம் அனுப்பியுள்ளாராம். அதைவைத்தே விஜய் மக்கள் இயக்கத்தினர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர். ஆனால், எக்காரணம் கொண்டும் அதை வெளியில் சொல்லக்கூடாது என்று ஸ்ட்ரிக்டாக ஆர்டர் போட்டுள்ளாராம் தளபதி விஜய்.


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


பாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp