தாய்மொழி கல்வி 5-ம் வகுப்பு வரை கட்டாயம் என்ற அறிவிப்புக்கு வரவேற்பு: தேமுதிக தலைவர் விஜயகாந்த் || DMDK vijayakant welcomed New Education Policy

Views : 54

மத்திய அரசின் புதிய கலிவிக் கொள்கையை வரவேற்கிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘மழலையர் கல்வி முதல் இடைநிலைக் கல்வி வரை அனைத்து மட்டத்திலும் உலகளாவிய அணுமுறையை உறுதி செய்வதை தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. பள்ளிப்படிப்பை பாதியிலேயே கைவிட்ட சுமார் 2 கோடி குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்க இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தாய்மொழி கல்வி 5-ம் வகுப்பு வரை கட்டாயம் என்ற அறிவிப்புக்கு வரவேற்கிறேன். இந்த வரையறையை 8-ம் வகுப்பு வரை நீ்ட்டிக்க வேண்டும். ஒருங்கிணைந்த பி.எட். கல்வி, வெளிப்படையான ஆசிரியர்கள் நியமனம் போன்ற அறிவிப்புகளுக்கு ஆசிரியர் சங்கங்கள் வரவேற்பு தெரிவத்துள்ளன.

உடல் குறைபாடு உள்ள குழந்தைகள் உயர்கல்வி வரை முழுமையாக மேற்கொள்ள இது வழிவகுக்கும். அன்னை மொழியை காப்போம், அனைத்து மொழியினையும் கற்போம் என்ற தேமுதிக-வின் கொள்கையின்படி மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையில் தாய் வழிக்கல்வி திட்டத்தினை 8-ம் வகுப்பு வரை நீட்டிக்க வேண்டும்.

இவ்வாறு விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


அதிமுக பொதுச்செயலாளர் பதவி சசிகலா வசம்! முதல்வர் பதவியில் எடப்பாடி!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp