ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் தலைமை கொறடா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு || Rajasthan Assembly Congress chief whip Mahesh Joshi approaches Supreme Court

Views : 41

ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு 18 எம்.எல்.ஏ.-க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக சட்டசபை காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடா மகேஷ் ஜோஷி சபாநாயகருக்கு புகார் அளித்தார். புகார் அடிப்படையில் சபாநாயகர் 19 பேருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.

சபாநாயகர் நோட்டீஸை எதிர்த்து 19 பேரும் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தற்போதைய நிலையே தொடர வேண்டும். நடவடிக்கை ஏதும் எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டது.

இந்நிலையில் ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராஜஸ்தான் சட்டசபை காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடா மகேஷ் ஜோஷி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

ஆகஸ்ட் மாதம் 14-ந்தேதி சட்டசபை கூடுகிறது. அப்போது சச்சின் பைலட் உள்பட 19 எம்.எல்.ஏ.-க்களால் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்ற ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சி நினைக்கிறது. இதனால் அவர்களை தகுதி நீக்கம் செய்து விட்டால் பிரச்சினை சரியாகிவிடும் என்று நினைக்கும் காங்கிரஸ் கட்சி அதற்கான வேலைகளை செய்து வருகிறது.


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


அதிமுக பொதுச்செயலாளர் பதவி சசிகலா வசம்! முதல்வர் பதவியில் எடப்பாடி!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp