கள்ளத் தொடர்பு வைத்திருந்த பெண்ணுக்கு நூதன தண்டனை- கணவன் கைது || Madhya Pradesh woman forced to carry husband on shoulders to atone for extramarital affair

Views : 128

போபால்:

மத்திய பிரதேச மாநிலம் ஜாபுவா மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் சாப்ரி ரன்வாஸ் கிராமத்தைச்  சேர்ந்த ஒரு பெண், தன் கணவனுக்குத் தெரியாமல் மற்றொரு ஆணுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் கணவனுக்குத் தெரியவர, மனைவியை கண்டித்துள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் அந்த பெண்ணுக்கு கிராம மக்கள் முன்னிலையில் தண்டனை கொடுக்கப்பட்டது. அந்த பெண்ணின் தோளில் அவரது கணவரை அமர வைத்து ஊரை சுற்றி வரச் செய்தனர். அப்போது அவரை கிராம மக்கள் ஏளனமாக பேசி திட்டித் தீர்த்தனர். 

கணவனை சுமந்துகொண்டு நடக்க முடியாமல் நின்றபோது அவரை கம்புகளால் தாக்கினர். இந்த சம்பவத்தை வீடியோ எடுத்தும் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவனை கைது செய்துள்ளனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


பாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp