ஆஸ்போர்டு தடுப்பூசியை 2 மற்றும் 3-ம் கட்டமாக மனிதர்களுக்கு பரிசோதனை செய்ய அனுமதி வழங்க நிபுணர் குழு பரிந்துரை

Views : 76

டெல்லி:

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளது.

இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் மருத்துவ பரிசோதனை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கும் உரிமையை இந்திய சீரம் இன்ஸ்டிடியுட் பெற்றுள்ளது. 
 
இந்தியாவில் ‘கோவிஷீல்டு’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருக்றது. மொத்தம் 3 கட்டங்களாக மனிதர்களுக்கு இந்த தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை செய்ய திட்டமிடப்படிருந்தது.

இதையடுத்து, மும்பை, புனே உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மாதம் இந்த தடுப்பூசி முதல் கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு பரிசோதனை நடைபெற்றது. இந்த பரிசோதனை நல்ல முன்னேற்றம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை 2 மற்றும் 3 ஆம் கட்டமாக மனிதர்களுக்கு பரிசோதனை செய்ய அனுமதி தரக்கோரி இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் (டிசிஜிஐ) சீரம் இன்டிடியுட் நிறுவனம் கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை பரிசீலனை செய்ய மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் (சிடிஎஸ்ஒசி) சிறப்பு நிபுணர் குழு ஒன்றை அமைத்தது.

அந்த குழு ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை மனிதர்களுக்கு அடுத்தகட்டமாக செலுத்துவது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டது. இந்த ஆய்வுகளுக்கு பின்னர் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை 2 மற்றும் 3 ஆம் கட்டங்களாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய அனுமதி வழங்கும்படி சிடிஎஸ்ஒசி அமைப்பின் நிபுணர் குழு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்புக்கு பரிந்துரை வழங்கியுள்ளது.

சிடிஎஸ்ஒசி-யின் பரிந்துரையை ஏற்று ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை இந்திய சிரம் இன்ஸ்டிடியுட் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய ஒரிரு நாட்களில் அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இறுதி கட்ட பரிசோதனையில் சிரம் இன்ஸ்டிடியுட் பல்வேறு மருத்துவமனைகளுடன் இணைந்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 1,600 பேருக்கு சோதனை முறையில் தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


பாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp