போட்ஸ்வானா: யானைகளின் மர்ம மரணங்களுக்கு தொற்று நோய் தான் காரணம் - ஆய்வில் தகவல்

Views : 59

கேபரான்:

உலகிலேயே அதிக யானைகளை கொண்ட நாடுகள் பட்டியலில் போட்ஸ்வானா முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான யானைகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்நாட்டின் ஒகவாங்கோ டெல்டா பகுதியில் உள்ள காடுகளில் கடந்த மே மாதம் முதல் ஜூலை வரை மொத்தம் 350-க்கும் அதிகமான யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதை விலங்குகள் நல ஆர்வலர்கள் கண்டுபிடித்தனர்.

உயிரிழந்துள்ள யானைகளின் தந்தங்கள் வெட்டி எடுக்கப்படவில்லை ஆகையால் இவை வேட்டையாடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், பெரும்பாலான யானைகள் செங்குத்தாக தரையில் விழுந்தவாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளன. 

இதனால் நரம்பியல் தொடர்புடைய நோய் ஏதேனும் யானைகளுக்கு பரவி இருக்கக்கூடும் எனவும்,அதன் காரணமாக யானைகள் இவ்வாறு உயிரிழந்திருக்கலாம் என பரவலான கருத்து நிலவின. மேலும், மனிதர்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் போன்ற தொற்று யானைகளுக்கும்
பரவி இருக்கலாம் எனவும் அதனால் யானைகள் உயிரிழந்திருக்கலாம் எனவும் பலர் கருதினர்.

மேலும், சில யானைகள் பாதை தெரியாமல் உடல் நிலை மோசமான நிலையில் ஒரே பகுதியை தொடர்ந்து சுற்றிக்கொண்டே கிழே விழுந்து உயிரிழந்தன.

இதையடுத்து, உயிரிழந்த யானைகளின் உடலில் இருந்து பரிசோதனைக்காக மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்காக தென் ஆப்பிரிக்கா, ஜிப்பாவே, கனடா ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டுன.

இந்நிலையில், இந்த பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியானது. இதில் யானைகளுக்கு பரவிய தொற்று நோய் காரணமாகவே அவை உயிரிழந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.

தேங்கி கிடக்கும் தண்ணீரை யானைக்கள் குடிக்கும்போது அதில் உள்ள கொடிய பாக்டீரியா கிருமி பரவுகிறது. இந்த நச்சுநிறைந்த பாக்டீரியா கிருமி மூலமாக நோய் தொற்று ஏற்பட்டு இயற்கையான நச்சு மூலமாகவே யானைகள் உயிரிழந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அடுத்த கட்டவிசாரணை நடைபெற்று வருவதாக போட்ஸ்வானா வன விலங்குகள் நலத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


பாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp