சாத்தான்குளம் சம்பவம்- ஜெயராஜ், பென்னிக்ஸ் பிரேத பரிசோதனை வீடியோ வெளியானதா?

Views : 101

சாத்தான்குளம்:

சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டனர். பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இதையடுத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி, சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 10 போலீசார் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் மதுரையில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரது பிரேத பரிசோதனை வீடியோ என்ற பெயரில் ஒரு வீடியோ ‘வாட்ஸ்-அப்’பில் பரவி வருகிறது. அதில், காயங்களுடன் இருந்த 2 உடல்களுக்கு பிரேத பரிசோதனை நடப்பது போன்றும், அதை மாஜிஸ்திரேட்டு ஒருவர் பார்வையிடுவது போன்றும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. மேலும் இறந்தவர்களின் உறவினர் ஒருவர் மாஜிஸ்திரேட்டு காலில் விழுந்து நீதி வழங்குமாறு கூறி கதறி அழுவது போன்ற காட்சிகளும் இடம்பெற்று உள்ளன.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


அதிமுக பொதுச்செயலாளர் பதவி சசிகலா வசம்! முதல்வர் பதவியில் எடப்பாடி!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp