வீட்டு வேலைக்கு ஆள் தேடுவோரை குறிவைத்து மோசடி- 3 ஆண்டுகளாக மோசடி செய்தது அம்பலம்

Views : 51

சென்னை:

சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அசோக் என்பவர் தன்னுடைய வீட்டில் வேலை பார்க்க பணிப்பெண்ணை கூகுள் இணையதளத்தில் தேடியுள்ளார். அப்போது ஜஸ்ட் டயல் மற்றும் சுலேகா ஆகிய ஆன்லைன் இணையதளங்களில் அவரின் தேடுதலுக்கு பல்வேறு விளம்பரங்கள் வந்தன.

பொதுவாக வீட்டு வேலைக்கு ஆட்களை ஏற்பாடு செய்து கொடுப்பதற்காக ஏராளமான மேன்பவர் ஏஜென்சிகள் இருக்கும். அந்த பட்டியலை எல்லாம் இந்த இணையதளம் அசோக் எண்ணிற்கு அனுப்பியிருக்கிறது. மேலும் ஏஜென்சி தரப்பிலிருந்து போன் செய்வார்கள். இதன் அடிப்படையில் அசோக்கை தொடர்பு கொண்டிருக்கிறார் அமுல் என்ற பெண். அமுல் மேன்பவர் ஏஜென்சியை தான் நடத்தி வருவதாக கூறி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், நம்பிக்கையான ஆட்கள் தன்னிடம் இருப்பதாக கூறியிருக்கிறார். சைதாப்பேட்டையில் தன்னுடைய நிறுவனம் இருப்பதாக கூறிய அவர், அதற்கான ஏஜென்சி கட்டண தொகையாக 5 ஆயிரம் ரூபாயையும் அசோக்கிடம் இருந்து வசூல் செய்துள்ளார் அந்த பெண். பணம் கட்டி நாட்களான பிறகும், வேலைக்கு ஆள் வராததால் சந்தேகமடைந்த அசோக், அந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்ற போது அது ஸ்விட்ச் ஆஃப் என வந்துள்ளது.

அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார் அசோக். 5 ஆயிரம் ரூபாய்க்காக காவல்துறைக்கு போக வேண்டுமா? என யோசித்த அவர், மீண்டும் இணையதளத்தில் தேடிய போது அதே பெண் வேறு வேறு பெயர்களில் வெவ்வேறு செல்போன் எண்களில் சுற்றி வருவது தெரியவந்தது.

இந்த தகவல் எல்லாமே ஜஸ்ட் டயல், சுலைகா போன்ற இணையதளத்தில் இருந்ததை கொண்டு அவர்களிடம் புகார் அளித்தும் எந்தவித பலனும் இல்லை என கூறப்படுகிறது. ஆனால் இதை விடவே கூடாது என தீர்மானித்த அவர், இந்த மோசடியை கண்டறிந்து வெளிக்கொண்டு வர களமிறங்கினார்.

வேலையாட்கள் தேடுவோரை குறிவைத்து எப்படி எல்லாம் மோசடி நடக்கிறது என்பதை கண்டறிய ஜூம் ஆப் செயலியை பயன்படுத்தி பலரையும் தொடர்பு கொண்டு ஒரு வீடியோ உருவாக்கினார். பாதிக்கப்பட்டவர்களை எல்லாம் தொடர்பு கொண்ட போது தான் அந்த பெண் கடந்த 2017ல் இருந்து தொடர்ச்சியான மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்தது. பாதிக்கப்பட்டவர்களின் பதிவுகளை எல்லாம் தொகுத்து ஆதாரமாக வீடியோ ஒன்றை உருவாக்கினார் அசோக். பின்னர் அதை அடையாறு துணை ஆணையருக்கு அனுப்பியதோடு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்...

அந்த பெண் நடத்தி வந்த நிறுவனம் தொடர்பாகவும், இதுவரை ஏமாந்தவர்கள் பற்றிய விபரங்களையும் சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஏஜென்சி பெயரில் மோசடி செய்த ஒரு பெண்ணை இளைஞர் ஒருவர் தன் முயற்சியால் ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியது பல தரப்பிலும் பாராட்டுகளை பெற வைத்துள்ளது.


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


பாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp