இலவச சிலிண்டர் வாங்கிட்டீங்களா? 28-ம் தேதிக்குள் புக் பண்ணுங்க!

Views : 102

முழு அடைப்பு காலகட்டத்திலும் இந்தியன்ஆயில் நிறுவனம், நாள் ஒன்றுக்கு 3 இலட்சம் வரை LPG சிலிண்டர்களை சப்ளை செய்கிறது.

தமிழ்நாட்டில் LPG சிலிண்டர்கள் சப்ளை பணிகளை இந்தியன் ஆயில் நிறுவனம் துரிதகதியில் மேற்கொண்டு வருகிறது. சராசரியாக ஒரு நாளில் 2.5 இலட்சம் சிலிண்டர்கள் டெலிவரி செய்யப்பட்டு வருகின்றன.

மாநிலத்தில் முழு அடைப்பு காரணத்தால் தேவை அதிகரித்துள்ளதால், பல நாட்களில், நாள் ஒன்றுக்கு 3 இலட்சம் வரையிலான சிலிண்டர்கள் டெலிவரி செய்யப்படுகின்றன.


சமையல் எரிவாயு தயாரிப்புகள் சீரான நிலையில், தங்கு தடையில்லாமல் சென்றடைய வேண்டும் என்பதற்காக, தமிழ்நாட்டில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 12 பாட்லிங் பிளான்ட்களும் தங்கள் முழு சக்தியைப் பயன்படுத்தி இடைஞ்சல் ஏதுமில்லாமல் ஞாயிற்றுக்கிழமைகள், விடுமுறை நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் இயங்கி வருகின்றன.

LPG விநியோகஸ்தர்களும் டெலிவரி பணியாளர்களும் கூடுதல் அக்கறையுடன் செயல்பட்டு LPG சிலிண்டர்களை பாதுகாப்பான வழிமுறையில் குறித்த நேரத்தில் வாடிக்கையாளர்களின் வீடுகளில் டெலிவரி செய்து வருகின்றனர்.

சப்ளை செயினின் கடைசி முனையில் உள்ளவர்களான டெலிவரி பணியாளர்கள், உயர் தரமான சுகாதாரம் மற்றும் சானிட்டேஷன் முறைகளைப் பின்பற்றி வருகின்றனர். அவர்கள், வாடிக்கையாளர்களின் வீடுகளில் LPG சிலிண்டர்களை கையாளும் போதும் டெலிவரி செய்யும் போதும் முக கவசங்களையும் கையுறைகளையும் அணிந்து பணிபுரிகிறார்கள்.எளியோருக்கான பிரதமரின் உஜ்வலா திட்டப் பயனாளிகளுக்கு இந்த ஆண்டு ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் மூன்று சிலிண்டர்களை இலவசமாக அளிப்பதாக அரசு அறிவித்துள்ளதால், LPG டெலிவரிகளில் உஜ்வலா வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும்படி, இந்தியன்ஆயில் நிறுவனம், தங்களுடைய விநியோகஸ்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

ஏப்ரல் மாதத்திற்கான சிலிண்டருக்கான சில்லறை விற்பனை விலைக்குரிய தொகை, தமிழகத்தில் உள்ள 16.7 இலட்சம் இந்தியன் ஆயிலின் உஜ்வலா திட்டப் பயனாளிகளில் 96%க்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

இந்த மொத்த அளவில், சுமார் 50%க்கும் மேல் அதாவது 8 இலட்சத்திற்கும் மேலான உஜ்வலா திட்டப் பயனாளிகள் சிலிண்டர்கள் புக் செய்து உள்ளனர். ஏறத்தாழ புக் செய்த அனைவருக்கும் சிலிண்டர்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளன.

இது வரை முதல் இலவச சிலிண்டர் வசதியைப் பெற்றுக் கொள்ளாத உஜ்வலா பயனாளிகள், ஏப்ரல் மாதம் 28 -ம் தேதிக்குள் புக் செய்து கொள்ளும்படி இந்தியன்ஆயில் நிறுவனம் கேட்டுக் கொள்கிறது. அப்படி புக் செய்து கொண்டால் ஏப்ரல் மாதம் முடிவில் அவர்களுக்கு சிலிண்டர் டெலிவரி செய்யப்படும்.

அவர்கள் அவ்வாறு பெற்றுக் கொண்ட பிறகு தான், இந்தியன்ஆயில் நிறுவனம், மே மாதத்திற்கான இரண்டாவது சிலிண்டர் தொகையை மே முதல் வாரத்தில் டெபாசிட் செய்ய இயலும். இருப்பினும், உஜ்வலா வாடிக்கையாளர்கள், முதல் இலவச சிலிண்டர் டெலிவரி செய்யப்பட்டு 15 நாட்களுக்குப் பிறகு மட்டுமே இரண்டாவது சிலிண்டருக்காக புக் செய்து கொள்ள முடியும்.

உஜ்வலா திட்ட பயனாளிகளுக்கான இலவச LPG சிலிண்டர்கள் குறித்து, மேலும் விவரங்கள் அறிய 805 600 2020 எண்ணில் திங்கள் முதல் சனி வரை, காலை 10.00 மணி முதல் மாலை 6.00 வரை தொடர்பு கொள்ளலாம்.


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


பாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp