குணமடைந்தவர்களுக்கு சுமார் 60, 70 நாட்கள் கழித்து கொரோனா அறிகுறி தோன்றுகிறது !

Views : 143

சீனாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்த நபர்களுக்கு 60, 70 நாட்கள் கழித்து மீண்டும் கொரோனா தொற்று ஏற்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் கொரோனாவிலிருந்து குணமாகி வீடு திரும்பிய நபர்களுக்கு பல நாட்களாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், கொரோனா இல்லை என முடிவுகள் வந்தன. இந்நிலையில், குணமடைந்தவர்களுக்கு சுமார் 60, 70 நாட்கள் கழித்து பரிசோதனை செய்யப்பட்டதில் பலருக்கு கொரோனா இருப்பதாக முடிவுகள் வந்தன. அதில் பலருக்கு எந்தவித அறிகுறியும் இல்லை என்பது கூடுதல் அதிர்ச்சி. இதனால், மருத்துவர்களும், வல்லுநர்களும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஏற்கனவே பாதிக்கப்பட்ட நபர்கள் 60 நாட்கள் கழித்து மீண்டும் நோய் தொற்றுக்கு ஆளானது குறித்த விவரங்களை சீனா துல்லியமாக வெளியிடவில்லை. ஆனால், இதுபோல் 12-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவிக்கின்றன. கொரோனா சந்தேகம் உள்ளவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது உலக நாடுகளின் அறிவுறுத்தலாக உள்ள நிலையில், 60 நாட்கள் கழித்தும் கொரோனா உறுதி செய்யப்படுவது அச்சத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது.

அதேசமயம், குணமடைந்த நோயாளிகளின் உடற் பாகங்களில் கொரோனா வைரஸ் தங்கியிருக்கக் கூடும் என்பதால் மீண்டும் அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும், ஆனால், அது பெரிய அளவு ஆபத்தை ஏற்படுத்தாது எனவும் தென்கொரிய வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


பாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp