டெல்லியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆயிரத்திற்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

Views : 58

டெல்லியில் ஜூன் மாதம் தொடக்கத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை தாண்டிய நிலையில் இருந்தது. இதனால் மத்திய அரசும், கெஜ்ரிவால் தலைமையிலான மாநில அரசும் இணைந்து கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க கூட்டு முயற்சி மேற்கொண்டனர்.

கொரோனா சிகிச்சைக்காக சிறப்பு வார்டுகள் திறக்கப்பட்டன. ராணுவம் சார்பில் 10 ஆயிரம் படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை உருவாக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பிசிஆர் பரிசோதனையுடன் ரேபிட் ஆன்டிஜென் டெஸ்ட் பரிசோதனையையும் நடைமுறைப்படுத்தியது. இதனால் நோயாளிகள் உடனடியாக அடையாளம் கண்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதனால் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 961 ஆக உள்ளது. இதன்மூலம் சுமார் இரண்டு மாதத்திற்குப் பிறகு டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.

இதுவரை 1,37,677 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1186 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் 1,23,317 பேர் குணமடைந்துள்ளனர். 4004 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 10,356 சகிச்சை பெற்று வருகின்றனர்.

டெல்லியில் கடந்த 24 அணி நேரத்தில் 4289 பிசிஆர் டெஸ்டுகளும், 8441 ரேபிட் ஆன்டிஜென் டெஸ்டுகளும் செய்யப்பட்டுள்ளன.






Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


பாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp