ராமர் கோவில் கட்டுவதற்காக 52 வருடங்களாக 150 ஆறுகளில் புனித நீர் சேகரித்த சகோதரர்கள்

Views : 48

ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை வருகிற புதன்கிழமை (ஆகஸ்ட் 5-ம்தேதி) அயோத்தியில் நடைபெறுகிறது. இதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த விழாவில் பிரதமர் மோடி, உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத் உள்பட 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

நீண்ட காலத்திற்குப்பிறகு பிரச்சினை ஓய்ந்து ராமன் கோவில் கட்டப்பட இருக்கிறது. இதனால் இந்தியாவில் உள்ள புனித இடங்களில் இருந்து மணல்கள், ஆறுகளில் இருந்து புனித நீர் சேகரித்து அயோத்திக்கு அனுப்பட்டு வருகிறது.

கடந்த 1968-ம் ஆண்டில் இருந்து ராமர் கோவில் கட்டுவதற்காக சகோதரர்கள் ராதே சியாம் பாண்டே மற்றும் ஷாப்த் வைகியானிக் மகாகவி திரிபாலா ஆகியோர் புனித இடங்களில் இருந்து மணல் மற்றும் ஆறுகளில் இருந்து புனித நீர் சேகரித்து வருகின்றனர்.

இலங்கையில் இருந்து 8 ஆறுகள், மூன்று கடல்களில் இருந்து புனித நீர்களும் 16 இடங்களில் இருந்து மணல்களும் சேகரித்துள்ளனர்.

மேலும் இந்தியா முழுவதில் இருந்து 150 ஆறுகளில் இருந்து புனித நீர் சேகரித்துள்ளார். இவைகளை சகோதரர்கள் இருவரும் அயோத்தி கொண்டு சேர்த்துள்ளனர்.

‘‘எப்போது ராமர் கோவில் கட்டப்படுகிறதோ, அப்போது இந்திய ஆறுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட ஆற்று புனித நீர்களையும், இலங்கையில் இருந்து சேகரிக்கப்பட்ட கடல் மணல்களும் அதில் இடம் பெற வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு. ராமர் அருளால் தற்போது இலக்கு அடையப்பட்டுள்ளது.

151 ஆறுகளில் இருந்து புனித நீர் சேகரித்தோம். அதில் 8 பெரிய ஆறுகளில், 3 கடல்களும் அடங்கும். இலங்கையில் 16 இடங்களில் மணல் சேகரித்தோம்’’ என்று ராதே சியாம் பாண்டே தெரிவித்துள்ளார்.

மேலும், 1968-ல் இருந்து 2019 வரை நடைபயணம், சைக்கிள், மோட்டார் சைக்கிள், ரெயில், விமானம் மூலம் பயணித்து இதை சேகரித்தேன். புனித நீரை ராமர் கோவில் கட்டுவதற்கு வழங்க விரும்பினேன்’’ என்றார்.


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


பாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp