கேட்காமலேயே உதவிய ரஜினிகாந்த்... நன்றி தெரிவித்த இயக்குநர்கள் சங்கம்!

Views : 35

திரைத்துறையில் உள்ள நலிந்த கலைஞர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த அத்தியாவசிய பொருட்கள் வழங்கி உதவி செய்துள்ளார்.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட்வர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதைக் கட்டுப்படுத்த மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளன. பலர் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் நிலை உருவாகியுள்ளது.

திரையுலகில் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருப்பதால் நடிகர்கள் வீட்டில் முடங்கியுள்ளனர். மேலும் திரைத்துறையின் 23 சங்கங்களை உள்ளடக்கிய பெஃப்சி சம்மேளனத்தில் தினக்கூலிகளாக பணியாற்றும் 20 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.


பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள் உதவ வேண்டும் என்று அச்சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி கோரிக்கை வைத்திருந்தார். அதை ஏற்று சினிமா தொழிலாளர்களுக்காக ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்த ரஜினிகாந்த், தற்போது துணை நடிகர்கள், உதவி இயக்குநர்கள் உள்ளிட்ட நலிந்த கலைஞர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட 24 டன் அத்தியாவசிய பொருட்களை வழங்கி உதவியுள்ளார்.



இதற்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியிருக்கும் இயக்குநர்கள் சங்கம், “குறிப்பறிந்து கேட்காமலே உங்கள் கலைக்குடும்ப சகோதர்களுக்கு வாரி வழங்கும் தங்கள் கொடையுள்ளத்தை வாழ்த்த வார்த்தைகள் இல்லை. போற்றுகிறோம்” என்று தெரிவித்துள்ளது.






Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


பாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp