புதிய கல்வி கொள்கை இந்தியாவை அறிவு மையமாக மாற்றும்- வெங்கையா நாயுடு

Views : 48

சென்னை:

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பல்வேறு குழுக்களிடம் அரசு விரிவாக ஆலோசித்த பின்பு ஒப்புதல் அளித்துள்ள, புதிய கல்வி கொள்கை இந்திய கல்வி வரலாற்றில் நிச்சயம் ஒரு அடையாளமாக இருக்கும். இது விரிவானது, முழுமையானது மற்றும் தொலைநோக்குடையது. மேலும் நாட்டின் எதிர்கால வளர்ச்சியை எளிதாக்குவதில் நிச்சயமாக முக்கிய பங்கு வகிக்கும். புதிய கல்வி கொள்கை ஒரு முழுமையான கற்றலை மையமாக கொண்ட நெகிழ்வான அமைப்பிற்கு வரவேற்கத்தக்க முக்கியத்துவத்தை அளிக்கிறது. இது இந்தியாவை ஒரு துடிப்பான, அறிவார்ந்த சமூகமாக மாற்ற முற்படுகிறது.

இது இந்தியாவில் வேரூன்றியிருப்பதையும், பெருமைகளையும் சரியாக சமநிலைப்படுத்துவதோடு, உலகெங்கிலும் இருந்து கற்றல் உலகில் சிறந்த யோசனைகள் மற்றும் நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதையும் சரியாக சமன் செய்கிறது. அதன் பார்வை உலகளாவியது. அதே நேரத்தில் நமது நாட்டை சேர்ந்தது. பள்ளிக்கு வெளியே உள்ள 2 கோடி குழந்தைகளை பிரதான நீரோட்டத்திற்குள் கொண்டு வருவதும், தொழிற்கல்வியை ஒருங்கிணைப்பதும் அதன் உயர்ந்த குறிக்கோள்களில் ஒன்றாகும். பாடத்திட்டத்தில் சுமை குறைப்பு, சுற்றுச்சூழல், மதிப்பு, நெறிமுறைகள் சார்ந்த வளங்கள் மற்றும் கல்விக்கான நியாயமான அணுகல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதே கல்வியின் முக்கியமான அம்சங்களாகும். அவை கல்வி கொள்கையில் நன்கு சேர்க்கப்பட்டுள்ளன.

பல வழிகளில் கல்வி கொள்கை மாணவர்களுக்கு விடுதலை அளிக்கிறது. மாணவர்கள் அதிக அதிகாரம் பெறுவதோடு, கற்றுக்கொள்ள விரும்பும் பாடங்களை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பையும் பெறுவார்கள். மருத்துவ மற்றும் சட்டக்கல்லூரிகளை தவிர்த்து அனைத்து நிறுவனங்களையும் கவனித்துக்கொள்வதற்கு ஒரே ஒரு கட்டுப்பாட்டாளரை கொண்டுவருவதன் மூலம் உயர்கல்வியை மையமாகக்கொண்டு ஆராய்ச்சி சார்ந்ததாக மாற்றுவதற்கான முயற்சி மற்றொரு வரவேற்கத்தக்க நடவடிக்கை.

புதிய கல்வி கொள்கையில் அதிகம் விவாதிக்கப்பட்ட ஒரு நிபந்தனை குறைந்தது 5-ம் வகுப்பு வரை கற்பிக்கும் முறை ஒரு பிராந்திய மொழியில் இருக்கும்.

இது இந்தியாவை பூர்வீகமாக அங்கீகரிக்கிறது. ஒருவரின் தாய்மொழி குறைந்தபட்சம் 5-ம் வகுப்பு வரை கற்பிக்கும் முறையாக இருக்கவேண்டும் என்று கல்வி கொள்கையில் உள்ள பரிந்துரை வரவேற்கத்தக்கது. தாய்மொழியில் கற்றல் குழந்தையின் படைப்பாற்றல், கற்பனை திறனை மேம்படுத்தும். இது மன வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்து, பிற மொழிகளை விரைவாக கற்க உதவுகிறது.

2017-ம் ஆண்டு வரை நோபல் பரிசு பெற்றவர்களில் 98 சதவீதத்திற்கும் அதிகமானோர் அவர்களுடைய தாய்மொழியில் பயின்றவர்கள் என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. தாய்மொழியை பேசுவதில்தான் பெருமை இருக்கிறது. இந்த பெருமை உணர்வை நம் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்து, ஊக்குவிக்கவேண்டும். பிராந்திய மொழிகளில் அழுத்தங்கள் இருந்தபோதிலும், எந்தவொரு மொழியையும் திணிப்பதும் இல்லை, எந்தவொரு மொழியையும் எதிர்ப்பதும் இருக்காது என்று கல்வி கொள்கை தெளிவாக கூறுகிறது.

இது உண்மையில் வரவேற்கத்தக்க நடவடிக்கை. வகுப்பறைகளில் மாற்றத்தை ஏற்படுத்த மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்படவேண்டும். சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்த கொள்கை, இந்தியாவை வளரும் அறிவு மையமாக மாற்றுவதற்கான முன்னோக்கிய வழி என்று நான் நம்புகிறேன். இந்த கொள்கையை திறம்பட செயல்படுத்த அனைத்து மாநிலங்களும் தங்கள் முழு மனதுடன் ஆதரவளிக்கும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


அதிமுக பொதுச்செயலாளர் பதவி சசிகலா வசம்! முதல்வர் பதவியில் எடப்பாடி!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp