கழிவறையை காணவில்லை - வடிவேலு பட பாணியில் நூதன போராட்டம்

Views : 76

சென்னை:

சென்னை தலைமைச்செயலகம் முன்பு தொண்டர் இயக்கத்தின் தலைவர் வக்கீல் தொண்டன் சுப்பிரமணி தலைமையில் 20-க்கும் மேற்பட்டோர் கூடி நேற்று நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது கழிப்பறை கோப்பையை கையில் ஏந்தியபடி அவர்கள் கண்டன கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டம் குறித்து தொண்டன் சுப்பிரமணி கூறுகையில், “தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பேரூராட்சி பஜாரில் அமைந்துள்ள பொது கழிப்பறை இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை. பொது கழிப்பறை இல்லாததால் அந்த பகுதியை சேர்ந்த வணிகர்கள் அவதிப்படுகிறார்கள். எனவே அரசின் கவனத்தை ஈர்க்க கழிப்பறை காணவில்லை என்ற நூதன போராட்டத்தில் ஈடுபடுகிறோம்”, என்றார். அதனைத்தொடர்ந்து அவர் முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் இது தொடர்பாக மனு ஒன்றை அளித்தார்.

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு ஒரு படத்தில் ‘கிணற்றை காணவில்லை’ என்று போலீசில் புகார் கொடுக்க வருவார். அதுபோல கழிப்பறை காணவில்லை என்று தொண்டர் இயக்கத்தினர் புகார் கொடுக்க வந்தது நேற்று பரபரப்பாக பேசப்பட்டது.


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


அதிமுக பொதுச்செயலாளர் பதவி சசிகலா வசம்! முதல்வர் பதவியில் எடப்பாடி!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp