லவ் ப்ரபோஸ் செய்ய மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து விட்டு காதலியை அழைக்க சென்ற காதலன் - தீப்பற்றி எரிந்த வீடு - காதலியின் பதில் என்ன?

Views : 48

லண்டன்:

இங்கிலாந்து நாட்டின் தெற்கு யார்க்‌ஷ்ரின் மாகாணத்தின் அபேடெலி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மார்க் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனது நீண்டகால தோழியான ரியாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், அவர் தனது காதலியிடம் காதலை தெரிவிக்கவேண்டும் என எண்ணினார். இது தனது காதலி ரியாவுக்கு சர்ப்ரைசாக இருக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளார்.

இதற்காக நேற்று இரவு வீட்டை பூக்களால் அலங்காரம் மார்க் வீடு முழுவதும் அழகு படுத்தும் விதமாக மெழுகுவர்த்தி ஏற்றிவைத்துள்ளார். தனது காதலி வந்து பார்க்கும்போது அவருக்கு சர்ப்ரைசாக இருக்கவேண்டும் என்ற நோக்கத்தோடும் அந்த சர்ப்ரைசோடு அவரிடம் லவ் ப்ரபோஸ் செய்யவும் இந்த ஏற்பாடுகளை செய்துள்ளார்.

பின்னர் இந்த ஏற்பாடுகளை செய்துவிட்டு அலுவலகத்தில் இருந்த ரியாவை அழைத்துவர தனது வீட்டில் இருந்து மார்க் காரில் சென்றுள்ளார்.
மார்க் சென்ற சில நிமிடங்களில் மெழுகுவர்த்திகளில் ஒன்று வீட்டில் இருந்த துணியில் விழுந்துள்ளது. இதனால் வீட்டில் தீப்பற்றிக்கொண்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் வீட்டில் பற்றிய தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்,

அப்போது அலுவலகத்தில் இருந்த தனது காதலி ரியாவை காரில் ஏற்றிக்கொண்டு மார்க் தனது வீடு வந்தடைந்தார். அங்கு வீடு தீப்பற்றி எரிவதையும், அதை அணைக்க தீயணைப்பு படையினர் முயற்சித்துவருவதையடும் கண்டு அவர் சற்று அதிர்ச்சியடைந்தார்.

தீயில் கருகிய மார்க்கின் குடியிருப்பில் ஒருபகுதி

ஆனாலும், முயற்சியை தளரவிடாத மார்க் பற்றிஎரிந்து கொண்டிருந்த தனது வீட்டிற்கு வெளியே தனது காதலி ரியாவிடம் தனது காதலை வெளிப்படுத்தும் வகையில் லவ் ப்ரபோஸ் செய்தார். வீடு ஒருபுறம் எரிந்து கொண்டிருக்கும் நிலையிலும் மார்க் லவ் ப்ரபோஸ் செய்ததை கண்டு ஆச்சரியமடைந்த ரியா ஒரு நிமிடம் செய்வதறியாது அப்படியே திகைத்து நின்றார்.

பின்னர் அடுத்த சில வினாடிகளில் மார்க்கின் லவ் ப்ரப்போசலை ஏற்றுக்கொண்ட ரியா தானும் உன்னை காதலிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து இருவரும் மகிழ்ச்சியடைந்தனர். இந்த நிகழ்வுகள் ஒருபக்கம் நடைபெற வீட்டில் பற்றிய தீ தீயணைப்பு படையினரால் அணைக்கப்பட்டது.

இதையடுத்து, இருவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்துவிட்டு தீயணைப்பு வீரர்கள் அங்கிருந்து சென்றனர்.

இந்த தகவலை தெற்கு யார்க்‌ஷ்ரின் மாகாண தீயணைப்புத்துறை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும், தங்கள் துறை சார்பாக காதலர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்ட யார்க்‌ஷ்ரின் தீயணைப்புத்துறை திருமணை அழைப்பிதலை மார்க்,ரியா தங்களிடம் வந்து கொடுப்பார்கள் என நம்புகிறோம் எனவும் பதிவிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சமூகவலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள ஒரு நபர் ‘மார்க்கை திருமண ஏற்பாடுகள் செய்ய அனுமதிக்காதீர்கள்’ என கிண்டலாக கூறியுள்ளார்.


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


அதிமுக பொதுச்செயலாளர் பதவி சசிகலா வசம்! முதல்வர் பதவியில் எடப்பாடி!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp