அனைத்து கொரோனா வைரஸ்களுக்கு எதிராகவும் தடுப்பூசிகள் செயல்படும் - ஆய்வில் அம்பலம்

Views : 75

கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ் உருவாகி 8 மாதங்கள் கடந்து விட்டன; ஆனால் மனித குலத்தின் சோகம்தான் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை.

சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று நேற்று மாலை, அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மைய புள்ளி விவரப்படி, உலகமெங்கும் 1.85 கோடிப்பேரின் உடல்களுக்குள் புகுந்திருக்கிறது. அது மட்டுமல்ல, 6.98 லட்சம் பேரின் உயிர்களை பறித்திருக்கிறது.

ஆனாலும் அதன் யானைப்பசி தீரவில்லை. இதனால்தான் அதை தடுத்து நிறுத்துவதற்காக உலகமெங்கும் 165 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இதுவரை எந்தவொரு தொற்று நோய்க்கும் இத்தனை தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்ட சரித்திரம் இல்லை.

கோவிஷீல்டு, கொரோனாவேக், சைனோபார்மின் 2 தடுப்பூசிகள், மார்டர்னா -1273, பிஎன்டி162 பி2 ஆகிய தடுப்பூசிகள் மூன்றாவது கட்ட சோதனையில் இருப்பது நம்பிக்கையூட்டும் தகவலாக அமைந்திருக்கிறது. இந்த தடுப்பூசிகள் வெற்றிகரமாக 2 கட்டம் மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு அவற்றில் நோய் எதிர்ப்புச்சக்தியும், டி செல்களும் உருவாவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல்லாயிரம் பேருக்கு செலுத்தி சோதிக்கிற மூன்றாம் கட்ட சோதனையும் வெற்றி கண்டு விட்டால் போதும் கொரோனா வைரஸ் தொற்றை நாம் விரட்டியடிக்கும் நிலைக்கு நெருங்கி விட்டோம் என்று பொருள்.

இந்த தடுப்பூசி முயற்சியில் ஒரு மகிழ்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது.

‘பிரண்டியர்ஸ் இன் மைக்ரோபயாலஜி’ பத்திரிகையில் வெளியாகியுள்ள தகவலைத்தான் குறிப்பிடுகிறோம். உலகமெங்கும் இருந்து பல்வேறு பரிசோதனைக்கூடங்களில் பிரித்தெடுக்கப்பட்ட 48 ஆயிரத்து 635 கொரோனா வைரஸ் மரபணு வரிசைகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் வெளி வந்திருக்கின்றன.

உலகின் அனைத்து கண்டங்களுக்கும் பயணித்து, பரவியுள்ள கொரோனா வைரஸ் மாற்றங்களை இத்தாலி நாட்டில் உள்ள போலோக்னா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வரைபடமாக்கி உள்ளனர்.

இதுபற்றி அந்த விஞ்ஞானிகள் கூறும்போது, “எங்கள் பகுப்பாய்வில் இந்த கொரோனா வைரஸ்கள் சிறிய மாற்றம் அடைந்திருப்பது தெரிய வந்துள்ளது. ஒரு மாதிரியில் 7 மாற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பொதுவான காய்ச்சல் இரு மடங்குக்கும் அதிகமாகிற மாறுபடுகிற விகிதத்தை கொண்டுள்ளன” என்கிறார்கள்.

போலோக்னா பல்கலைக்கழக பேராசிரியர் பெடரிகோ ஜியோர்கி இதுபற்றி கருத்து தெரிவிக்கையில், “கொரோனா வைரஸ் ஏற்கனவே மனிதர்களை பாதிக்கும் வகையில் உகந்ததாக உள்ளது. மேலும் இது அதன் குறைந்த பரிணாம மாற்றத்தை கொண்டிருக்கிறது. இதன் அர்த்தம், கொரோனா வைரசுக்கு எதிராக உருவாக்குகிற தடுப்பூசி உள்ளிட்ட சிகிச்சைகள் அனைத்து கொரோனா வைரஸ் திரிபுகளுக்கும் எதிராக பயன் உள்ளதாக இருக்கும்” என்கிறார்.

தற்போது கொரோனா வைரசின் 6 திரிபுகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

இதில் அசல் 1, எல் என்னும் திரிபு ஆகும். இதுதான் 2019 டிசம்பரில் சீனாவின் உகானில் தோன்றியதாகும். இதன் முதல் மாற்றம், எஸ் திரிபு 2020 தொடக்கத்தில் தோன்றியது. வி மற்றும் ஜி திரிபுகள், ஜனவரி மத்தியில் பரவலாக காணப்பட்டன. இன்றுவரை ஜி திரிபு பரவலாக உள்ளது. இது பிப்ரவரி மாத இறுதியில் ஜிஆர் மற்றும் ஜிஎச் திரிபுகளாக மாற்றப்பட்டுள்ளன.

“ஜி திரிபு மற்றும் அதனுடன் தொடர்புடைய ஜிஆர் மற்றும் ஜிஎச் திரிபுகள் மிகவும் பரவலாக உள்ளன. இது நாங்கள் பகுப்பாய்வு செய்த அனைத்து மரபணு வரிசைகளிலும் 74 சதவீதம் உள்ளன” என்கிறார் பேராசிரியர் பெடரிகோ ஜியோர்கி.

அவை 4 மாற்றங்களை முன்வைக்கின்றன. அவற்றில் 2 ஆர்.என்.ஏ. பாலிமரேஸ் மற்றும் ஸ்பைக் புரதங்களின் வரிசையை மாற்ற முடிகிறது. இந்த பண்பானது, வைரசின் பரவலை எளிதாக்குகிறது என்றும் பெடரிகோ ஜியோர்கி கூறுகிறார்.

6 முக்கிய திரிபுகளை தவிர ஆராய்ச்சியாளர்கள் சில அரிதான மாற்றங்களையும் அடையாளம் கண்டுள்ளனர். இதற்காக தற்போது கவலைப்பட ஏதுமில்லை என்றாலும் கண்காணிக்கப்பட வேண்டும் என்கிறார்கள்.

முடிவாக விஞ்ஞானிகள் சொல்வது, கொரோனா வைரஸ் குறைந்த பரிணாம மாற்றத்தை கொண்டிருப்பதால், அது கொரோனா வைரசுக்கு எதிராக உருவாக்கி வரும் தடுப்பூசிகளும் சிகிச்சைகளும் அனைத்து வைரஸ்களுக்கு எதிராகவும் பலன் அளிக்கும் என்பதுதான். இதனால் கொரோனா வைரசை விரட்டியடிக்கும் காலம் தொலைவில் இல்லை.


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


பாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp