திமுகவில் இருந்து கு.க.செல்வம் சஸ்பெண்ட்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Views : 47

சென்னை:

கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சென்னை ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கு.க.செல்வம். இவர் தி.மு.க. தலைமை நிலைய செயலாளராகவும் உள்ளார். சமீபத்தில், சென்னை மேற்கு மாவட்ட செயலாளராகவும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகன் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி மரணம் அடைந்தார்.

அவர் வகித்து வந்த மாவட்ட செயலாளர் பொறுப்பு தனக்கு கிடைக்கும் என கு.க.செல்வம் நம்பிக்கையுடன் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், சிற்றரசு என்பவருக்கு சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டதாக கு.க.செல்வம் அதிருப்தியில் இருந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில், நேற்று டெல்லி சென்ற தி.மு.க. எம்.எல்.ஏ. கு.க.செல்வம், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன், தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ், துணைத் தலைவர்கள் வி.பி.துரைசாமி, எம்.என்.ராஜா ஆகியோர் இருந்தனர்.

பின்னர் வெளியே வந்த கு.க.செல்வம், நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்துக்கு மின் தூக்கி வேண்டும் என்ற கோரிக்கையுடன் மத்திய மந்திரி பியூஷ் கோயலை சந்தித்தாக தெரிவித்தார்.

மேலும் நான் பா.ஜ.க.வில் இணையவில்லை. இன்னும் தி.மு.க. எம்.எல்.ஏ.வாகவே இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ கு.க.செல்வத்தை சஸ்பெண்ட் செய்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஏன் நீக்கக்கூடாது என செல்வத்துக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைமை நிலைய செயலாளர், செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளில் இருந்தும் செல்வம் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பாரதிய ஜனதாவுக்கு மாற டெல்லி வரை சென்று திரும்பிய நிலையில் கு.க.செல்வம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


அதிமுக பொதுச்செயலாளர் பதவி சசிகலா வசம்! முதல்வர் பதவியில் எடப்பாடி!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp