கொத்து கொத்தாய் மரணங்கள் அச்சத்தின் பிடியில் அமெரிக்கா!

Views : 96

அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 2,054 பேர் பலியான பரிதாபம்!
கொரோனா தொற்றுக்கு அமெரிக்காவில் ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அங்கு பலியானோர் எண்ணிக்கை 54 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

சீனாவிலிருந்து பரவி உலகையே துவம்சம் செய்யும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் மையப்புள்ளியாக மாறிப்போன அமெரிக்காவில் நாளுக்கு நாள், நிமிடத்திற்கு நிமிடம் என்றில்லாமல் நொடிக்கு நொடி என்ற வேகத்தில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவின் கொடூரப் பிடியில் சிக்கி தங்கள் உயிரை இழந்துள்ளனர். நேற்று மட்டும் புதிய எண்ணிக்கையாக 34 ஆயரம் பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 லட்சத்து 60 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இவர்களில் 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவின் உள்நாட்டு வருவாய்த் துறை அஞ்சலக ஊழியர்களை பணிக்குத் திரும்புமாறு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பான அறிக்கையில், பணிக்குத் திரும்பும் ஊழியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்படும் என்றும், முகமூடி அணிய வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே கொரோனா தொற்றைத் தடுக்கும் முன்களப் பணியாளர்களைப் பாதுகாக்கும் வகையில் நாடு முழுவதும் நடமாடும் சோதனைக் கூடத்தை ஏற்படுத்த அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் முன்களப் பணியாளர்களின் இருப்பிடங்களுக்கே சென்று, கொரோனா சோதனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் கொரோனா சோதனையை வரும் வாரங்களில் இருமடங்கு வீரியத்துடன் செயல்படுத்த திட்டமிட்டுள்ளாக தொற்றுநோய் தடுப்புத்துறை இயக்குநர் ஆன்டனி பவ்சி தெரிவித்துள்ளார்.

கொரேனா தொற்றினால் பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பிய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் திங்கள் முதல் பணிக்குத் திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


பாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp