கையில் மூன்று பச்சிளம் குழந்தைகள்; தவிக்கும் நர்ஸ்! மனதை கலங்கடிக்கும் பெய்ரூட் புகைப்படம்

Views : 78

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இன்று நடந்த வெடி விபத்தில் 100- க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். 4. 000 பேருக்கும் மேலானவர்கள் காயமடைந்துள்ளனர். வெடி விபத்து நிகழ்ந்த பெய்ரூட்டின் அஷ்ரஃபியா என்ற இடத்தில் இருந்த ஜார்ஜ் மருத்துவமனையும் சேதமானது.


மருத்துவமனையில் பணியாற்றிய 4 நர்ஸ்கள் இறந்து போனார்கள். 200 நோயாளிகள் காயமடைந்தனர். வெடி விபத்தின் போது, மருத்துவமனையில் பணி புரிந்த நர்ஸ் ஒருவர் கையில் மூன்று பச்சிளம் குழந்தைகளை வைத்து கொண்டு உடைந்து சிதறிய ஜன்னல் அருகே நின்று பேசுவது போன்ற புகைப்படம் வைரலாகியுள்ளது.


வெடி விபத்து சமயத்தில் மருத்துவமனையில் இருந்த இந்த மூன்று பச்சிளம் குழந்தைகளையும் அந்த நர்ஸ் காப்பாற்றியுள்ளார் . அப்போது, பதற்றத்துடன் யாருக்கோ போன் செய்துள்ளளார். இந்த புகைப்படத்தை பிலால் மெரி ஜெவீஸ் என்ற போட்டோகிராபர் எடுத்து தன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


அதில்,', தன் வாழ்க்கையில் இப்படி ஒரு கொடுரமான சம்பவத்தை பார்த்ததில்லை . இந்த மருத்துவனையில் பல குழந்தைகள் ரத்த வெள்ளத்தில் கிடந்தன. இந்த நர்ஸ் தன் கையில் மூன்று குழந்தைகளை வைத்துக் கொண்டு யாருடனோ போனில் பேச முயற்சித்தார். என் 16 வருட கால புகைப்பட அனுபவத்தில் இப்படி ஒரு காட்சியை பார்த்ததில்லை' என்று குறிப்பிட்டுள்ளார்.


Three green children in hand; Suffering Nurse! The mind-boggling Beirut photo


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


அதிமுக பொதுச்செயலாளர் பதவி சசிகலா வசம்! முதல்வர் பதவியில் எடப்பாடி!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp