49 ரூபாய்க்கு கொரோனா சிகிச்சை மாத்திரை - முன்னணி நிறுவனம் வினியோகம்

Views : 113

புதுடெல்லி:

கொரோனா வைரஸ் தொற்றுக்கென எந்த மருந்தும் இன்னும் கண்டுபிடித்து, விற்பனைக்கு வரவில்லை. பிற நோய்களுக்கான மாத்திரை, ஊசி மருந்துகளை அவசர தேவைக்கு ஏற்ப சோதனை அடிப்படையில் பயன்படுத்த இந்தியாவில் அனுமதி அளிக்கப்படுகிறது.

அந்த வகையில் ஜப்பானில் இன்புளூவன்சாவுக்கு வாய்வழி வைரஸ் தடுப்பு மருந்தாக பேவிபிராவிர் மாத்திரை தரப்படுகிறது. இது வைரஸ் நகலெடுப்பை தடுக்கிற ஆர்.என்.ஏ. பாலிமரேசை தேர்ந்தெடுப்பதை தடுக்கிறது.

இந்த மருந்தை கொரோனா வைரஸ் தொற்றின் லேசான மற்றும் மிதமான பாதிப்பில் உள்ளவர்களுக்கு தர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிற பன்னாட்டு மருந்து நிறுவனம் லூபின், பேவிபிராவிர் மாத்திரையை கோவிஹால்ட் என்ற பெயரில் இந்தியாவில் வினியோகிக்க லூபின் நிறுவனத்துக்கு அனுமதி அளித்துள்ளது. இந்த மாத்திரை ஒன்று ரூ.49 என்ற விலைக்கு சந்தையிடப்பட்டுள்ளது.

இந்த மாத்திரை 200 மில்லிகிராம் அளவில் 10 மாத்திரைகள் கொண்ட அட்டையாக கிடைக்கிறது.

இதுபற்றி லூபின் நிறுவனத்தின் தலைவர் ராஜீவ் சிபல் கூறுகையில், “காச நோய் போன்ற பரவலான சமூக நோய்களை நிர்வகிப்பதில், அதன் நிபுணத்துவத்தை இந்தியா முழுவதும் உள்ள நோயாளிகளை விரைவாக சென்றடையவும், அதன் வலுவான வினியோக வலையமைப்பு மற்றும் களப்பணி மூலம் கோவிஹால்ட் மாத்திரை கிடைப்பதை உறுதி செய்யவும் முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்” என குறிப்பிட்டார்.

நேற்று சன் பார்மா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், பேபிபிராவிர் மாத்திரையை புளூகார்ட் என்ற பெயரில் மாத்திரை ஒன்றுக்கு ரூ.35 என்ற விலையில் சந்தையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


பாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp