டிக்டாக் பிரபலம் ஜி.பி முத்து மீது புகாரளிக்க உள்ளதாக நடிகை மீராமிதுன் ட்வீட்

Views : 117

தன்னை விமர்சித்து வீடியோ வெளியிட்ட ஜி.பி முத்து மீது நெல்லை போலீசில் புகாரளிக்க உள்ளதாக நடிகை மீரா மிதுன் தெரிவித்துள்ளார்

மாடலிங் உலகில் இருந்து 8 தோட்டாக்கள் திரைப்படம் மூலமாக நடிகை மீரா மிதுன் தமிழ் சினிமாவில் காலடி எடுத்துவைத்தார். பெரிய எண்ணிக்கையிலான படங்களில் நடிக்கவில்லை என்றாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானார்.

இந்த நிகழ்ச்சியை அடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் அதிகரித்தன. இந்த நிலையில், சமூக வலைதளங்களில் வனிதாவின் திருமண சர்ச்சைகள் ஓய்ந்த நிலையில், மீரா மிதுனின் சமீபத்திய வீடியோக்கள் பரபரப்பாக பேசப்படுகிறது.

சினிமாவில் வாரிசு ஆதிக்கம் ஆகியவை பற்றி பேசத்தொடங்கிய மீரா மிதுன், ஒரு கட்டத்தில் விஜய், சூரியா ஆகியோரின் குடும்பத்தினர் பற்றி அவதூறாக பேசத்தொடங்கினார். இதற்காக ரசிகர்களின் எதிர்வினையையும் அவர் சம்பாதித்து வருகிறார்.

மீரா மிதுனை விமர்சித்து வீடியோ வெளியிடும் ரசிகர்கள் மீது போலீசில் புகாரளிக்கப்போவதாகவும் அவரின் சமீபத்திய ட்வீட்கள் தெரிவிக்கின்றன. பப்ளிசிட்டிக்காக மீரா மிதுன் இப்படி நடந்து கொள்வதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்த நிலையில், டிக்டாக் பிரபலமான ஜி.பி முத்து, தன்னை விமர்சித்து ஒரு வீடியோ வெளியிட, அதற்கு பதிலளித்துள்ள மீரா மிதுன், நெல்லை காவல் நிலையத்தில் தனது வழக்கறிஞர் மூலம் புகாரளிக்க உள்ளதாக ட்வீட் செய்துள்ளார்.

டிக்டாக் பிரபலமான ஜி.பி முத்து, சமீபத்தில் குறிப்பிட்ட சமூகம் குறித்து அவதூறாக பேசியதாக போலீஸ் விசாரணைக்கு சிக்கி, பின்னர் மன்னிப்பு கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Video with harsh criticism - Actress Meeramithun tweets that Tiktok celebrity has to report on GP Pearl


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


பாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp