ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து எளிதாக இ-பாஸ் பெறலாம்- மாநகராட்சி ஆணையர்

Views : 45

சென்னை:

சென்னை மாநகராட்சியின் அண்ணா நகர் மண்டலத்திற்குட்பட்ட அயனாவத்தில் கொரோனா குறித்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நிகழ்ச்சியின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகும் சதவிகிதம் 87.05% ஆக உள்ளது. இதற்கு தினசரி அடிப்படையில் பரிசோதனைகளை அதிகரித்தது முக்கிய பங்கு வகித்துள்ளது.

சென்னையில் ஆரம்பகட்டத்தை விட பின் நாட்களில் தொற்று குறைவதற்கு மக்களின் ஒத்துழைப்பே காரணம். சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு களப்பணிகள் 3 அல்லது 4 மாதங்களுக்கு தொடரும்” என்றார்.

மேலும் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து எளிதாக இ-பாஸ் பெறலாம் என்று தெரிவித்த அவர் புரோக்கர்கள், தனி நபர்களை பொதுமக்கள் அணுக வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார். மாவட்டங்களுக்கு இடையிலான பயணத்திற்காக இ-பாஸ் வழங்குவதில் இருந்த சிக்கல்களை எளிமைப்படுத்தி தற்போது 30% - 35% வரை கூடுதலாக இ-பாஸ்களை வழங்கி வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். 


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


பாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp