கோழிக்கோடு விமான விபத்து... புதிய தகவல்.. இதனால் விபத்தா?

Views : 235

கோழிக்கோட்டில் நேற்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ரன்வே துவங்குவதற்கு ஆயிரம் அடிக்கு முன்னராகவே தரையிறங்கி இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கன மழை பெய்து கொண்டு இருந்த காரணத்தால் விமான ஓட்டியால் ரன்வேயை கண்டறிய முடியவில்லை. இதனால் ரன்வேக்கு முன்னரே தரை இறக்கி, அதன் பின்னர் விபத்தை சந்தித்துள்ளது.

கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இரவு துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்க முயற்சித்தது. அப்போது கன மழை பெய்து கொண்டு இருந்தது. விமான ஓட்டிக்கு ரன்வே தெரியவில்லை. இதனால் விமானத்தை இறக்காமல் இரண்டு முறை வானத்தில் வட்டம் அடித்துள்ளார்.

முதலில் ரன்வே எண் 28ல் இறக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பின்னர், அங்கு இறங்க முடியாத காரணத்தினால் ரன்வே எண் 10ல் இறங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து விமான தள கட்டுப்பாட்டு அறையின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், 'ரன்வே 10 துவங்குவதற்கு முன்பு 'டேக்ஸிவே சி' உள்ளது. இது ரன்வே 10ல் இருந்து ஆயிரம் மீட்டருக்கு முன்பே உள்ளது. தரையிறங்கும் முன்பு இந்த இடத்தில் விமானம் தரையிரங்கியுள்ளது. அதாவது டேபிள்டாப் தளத்தில் இறங்காமல், அதற்கு முன்னதாக இறங்கியுள்ளது. இந்த ஓடுதளத்தின் நீளம் 2,700 மீட்டர். விமானம் இறங்கும்போது கன மழை பெய்து கொண்டு இருந்தது. 2000 மீட்டர் வரை மட்டுமே, பார்வை கிடைத்துள்ளது.


இந்த நிலையில் இறங்கிய விமானம் இரண்டாக உடைவதற்கு முன்பு அருகில் இருக்கும் 35 அடி சரிவில் இறங்கியுள்ளது. இதையடுத்து இரண்டாக உடைந்துள்ளது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.


Kozhikode plane crash ... New information .. Is this an accident?


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


பாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp