கொரோனா வைரஸ் பயத்தால் வெளியே வராமல் இருக்கிறார் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!

Views : 214

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கொரோனா வைரஸ் பரவலால் அச்சமடைந்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

கிம் ஜாங் உன் கடந்த சில நாட்களாக பொது இடங்களில் தலை காட்டாமல் உள்ளது அமெரிக்க உளவுத் துறையை சந்தேகத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து கிம்மிற்கு உடல்நிலை மோசமாக உள்ளதாக தெரிவித்தனர்.

இதையடுத்து டெய்லி என்கே என் கிம் ஜான் உன்னிற்கு ஏப்ரல் 12-ஆம் தேதி இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தது. தனது தந்தை இறப்பிற்கு பிறகு அதிபர் பதவிக்கு வந்த கிம்மிற்கு பிறகு அப்பதவிக்கு யார் வருவார் என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.

இந்த நிலையில் 36 வயதாகும் கிம் ஜாங் உன் கொரோனா வைரஸ் அச்சத்தால் வெளியே வராமல் தனிமைப்படுத்தப்பட்டிருக்கலாம் என அல்ஜஜீரா செய்தித் தளம் தெரிவித்துள்ளது. மேலும் அவருக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் உள்ளதால் கொரோனா வர அதிகம் வாய்ப்பிருப்பதால் அவர் யாரையும் சந்திக்காமல் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

கடந்த 2014-ஆம் ஆண்டு கிம் ஜாங் உன் ஒரு மாதத்திற்கு மேல் பொது வெளியில் தோன்றாமல் இருந்தார். பின்னர் அவர் தாங்கி தாங்கி நடப்பது போன்ற காட்சிகள் தென் கொரிய அரசு தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது. அது போல் தற்போதும் அவர் 13 நாட்களுக்கு மேல் பொது வெளியில் தோன்றாமல் உள்ளார்.

இதனால் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரப்பப்படுகிறது. அவர் இறந்திருக்கலாம் என்கிறார்கள், அவர் மூளைச்சாவு அடைந்திருக்கலாம் என்கிறார்கள், அவர் நன்றாக இருக்கலாம் என்கிறார்கள். வடகொரிய நாட்டு அரசு ஊடகங்களோ அவர் ஏப்ரல் 14-ஆம் தேதி ஏவுகணை சோதனையை பார்வையிட்ட வீடியோவை இன்னும் வெளியிடாதது ஊகங்களுக்கு கை, கால் , கண், மூக்கு வைத்து பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அவர் உயிரோடு இருப்பதாகவும் நலமாக இருப்பதாகவும் தென்கொரியா உறுதியாக தெரிவித்துள்ளது. பியாங்யாங்கில் கிம்மின் விமானம் இருப்பது போன்றும் வான்சானில் அவரது ரயில் நிற்பது போன்றும் செயற்கைக் கோள் புகைப்படங்களை தென் கொரிய உளவுத் துறை வெளியிட்டுள்ளது. இதனிடையே கிம்மிற்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்க அந்நாட்டுக்கு மருத்துவக் குழுவினரை சீனா அனுப்பியுள்ளது.


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


பாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp