ஜோதிகா பேச்சை நியாயப்படுத்துவது வெட்கக்கேடானது - காயத்ரி ரகுராம்

Views : 2291

நடிகை ஜோதிகா விருது வழங்கும் விழா நிகழ்ச்சியொன்றில் பேசும்போது கோவில்களுக்கு செலவிடும் அதே தொகையை மருத்துவமனைகளுக்கும் பள்ளிகளுக்கும் கொடுங்கள் என்று பேசியது சர்ச்சையானது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பும், இன்னொரு தரப்பினர் ஆதரவும் தெரிவித்தனர். சமூக வலைத்தளத்திலும் விவாதமாக மாறியது.

இதுகுறித்து நடிகை காயத்ரி ரகுராம் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- நடிகர்களுக்கு கோவில் கட்டுபவர்களுக்கு அவ்வளவுதான் அறிவு. இப்படிப்பட்டவர்கள் எப்போதுமே சனாதன தர்மத்தை புரிந்து கொள்ள மாட்டார்கள். காரணம் அவர்களின் மூளை அவ்வளவுதான். தி.மு.க, தி.க., நாம் தமிழர், விடுதலைசிறுத்தைகள் கட்சிகளின் ஏவலர்கள் ஆதாரமற்ற கருத்துகளுடன் வருகின்றனர்.

ஜோதிகா பேச்சை நியாயப்படுத்துவது வெட்கக்கேடானது. தனது பேச்சுக்காக ஜோதிகா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். ஜோதிகா பேச்சில் சமத்துவம் இல்லை. பிரபலமாக இருக்கும் அவர் உண்மையற்ற தகவல்களை பரப்ப கூடாது. ஜோதிகா மீது எனக்கு வெறுப்பு இல்லை. மேடையில் பேசும்போது கவனமாக பேச வேண்டும். இந்து பற்றி பேசும்போது மற்ற மதங்களையும் உள்ளடக்கி பேசி இருக்கலாம்.


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


பாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp