விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்ற வேண்டாம்.. ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்!

Views : 340

தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்ற வேண்டாம் நடிகர் சூர்யா தனது ரசிர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகை மீரா மீதுன் கடந்த சில நாட்களாக நடிகர்கள் சூர்யாவையும் விஜயையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். அவர்களின் குடும்பத்தை கோலிவுட் மாஃபியா என குறிப்பிட்டு வருகிறார் மீரா மிதுன்.

அதோடு நடிகர் சூர்யாவுக்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாது என்றும், தானா சேர்ந்த கூட்டம் படத்தில் ஒரு காட்சிக்கு அத்தனை டேக் வாங்கினார் என்றும் விமர்சித்தார்.

விஜய் மற்றும் சூர்யாவின் ரசிகர்கள் தன்னை தவறாக பேசினால் விஜய் மனைவி சங்கீதாவையும் சூர்யா மனைவி ஜோதிகாவையும் நான் பேசுவேன் என கொச்சையான வார்த்தையை பயன்படுத்தினார். இதனால் கடுப்பான இரு நடிகர்களின் ரசிகர்களும் மீரா மிதுனை படுமோசமாக பேசி வருகிறார்கள்.

இந்நிலையில் இதுகுறித்து நேற்று அறிக்கை விட்ட இயக்குநர் பாரதிராஜா, மீரா மிதுன் விஜய் மற்றும் சூர்யா பற்றி பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளார். மேலும் அழகிய ஒவியத்தின் மீது சேறடிப்பது போல் மீரா மிதுன் வரம்பின்றி பேசுவதாகவும் இதுவரை பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன் என்றும் கூறியிருந்தார்.

அதோடு நடிகர்களும், தங்களின் ரசிகர்கள் ஆபாசமாக பேசுவதை அனுமதிக்கக்கூடாது என்றும் கூறியிருந்தார். ரசிகர்கள்தான பேசுகிறார்கள் நமக்கென்ன என்று வேடிக்கை பார்க்கக்கூடாது என்றும் ஒரு அறிக்கை வெளியிட்டாவது ரசிகர்களை மட்டுப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து டிவிட்டியுள்ளார் நடிகர் சூர்யா, அதில் இயக்குநர் பாரதிராஜாவுக்கு நன்றி கூறியுள்ளார். மேலும் தனது ரசிகர்களுக்கும் அறிவுரை கூறியுள்ளார் நடிகர் சூர்யா. இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் தெரவித்திருப்பதாவது, எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம். இயக்குனர் இமயம் திருமிகு. பாரதிராஜா அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள்.

மேலும் தான் 2018ஆம் ஆண்டு பதிவிட்ட டிவிட்டையும் மேற்கோள் காட்டியிருக்கிறார். அதில் தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற.. என தெரிவித்துள்ளார்.
Do not react to criticism .. Actor Surya appeals to fans!


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


பாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp