மகேஷ் பாபு விடுத்த சவாலை செய்து காட்டிய விஜய் !

Views : 413

சமீபத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு விஜய்க்கு #GreenIndiaChallenge விடுத்திருந்த நிலையில் அதை செய்து முடித்துள்ளார் விஜய்.

தெலுங்கு திரையுலகில் #GreenIndiaChallenge என்ற சவால் பிரபலமாகி வருகிறது. ஒருவர் மரக்கன்றை நட்டு அதனைப் புகைப்படம் எடுத்து வெளியிட்டு, மேலும் மூவருக்கு அதை எடுத்துச் செல்ல வேண்டும்.


சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் மகேஷ் பாபு, “எனது பிறந்தநாளைக் கொண்டாட இதைவிட சிறந்த வழி இருக்க முடியாது. இந்த #GreenIndiaChallenge சவாலை ஜூனியர் என்.டி.ஆர், விஜய், ஸ்ருதிஹாசன் ஆகியோருக்குவிடுக்கிறேன். இந்தச் சங்கிலி எல்லைகளைக் கடந்து தொடரட்டும். இதற்கு நீங்கள் எல்லாரும் ஆதரவு அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து நடிகர் விஜய் மகேஷ் பாபுவின் சவாலை ஏற்று தனது வீட்டில் மரக்கன்றுகளை நட்டுள்ளார்.

தான் மரக்கன்று நடும் புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் நடிகர் விஜய் மகேஷ் பாபுவின் ட்விட்டர் பக்கத்தைக் குறிப்பிட்டு, ‘இது உங்களுக்காக மகேஷ் பாபு. பசுமை இந்தியாவுக்கும் நல்ல ஆரோக்கியத்துக்கும். பாதுகாப்பாக இருங்கள்” என்று கூறியுள்ளார்.

விஜய்யின் ட்விட்டர் பதிவு லைக்ஸ்களை குவித்து வருகிறது

மாஸ்டர் அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்கள் விஜய்யின் புதிய புகைப்படத்தைப் பார்த்த மகிழ்ச்சியில் உள்ளனர்.Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


பாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp