ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!

Views : 2525

செப்டம்பர் 28-ம் தேதியன்று நடந்த செயற்குழுவில், முதல்வர் வேட்பாளர் குறித்து உச்சகட்ட மோதல் நடந்தது. ‘வழிகாட்டுதல்குழு அமைக்க வேண்டும்’ என்பதில் பன்னீர் தரப்பு விடாப்பிடியாக நிற்க... ‘அதற்கு வாய்ப்பே இல்லை’ என்று மறுத்துவிட்டது எடப்பாடி தரப்பு. ஆத்திரமடைந்த பன்னீர், அடுத்தடுத்த நாள்களில் முதல்வரை முற்றிலும் புறக்கணித்தார். செப்டம்பர் 29-ம் தேதி நடந்த ஆட்சியாளர்களுடனான காணொலி ஆலோசனைக் கூட்டத்திலும் அவர் கலந்துகொள்ள வில்லை.


கிரீன்வேஸ் சாலையிலுள்ள தனது வீட்டில் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட தன் ஆதரவாளர்களுடன் தீவிரமாக ஆலோசித்துக் கொண்டிருந்தார். அப்போதே அவர் கிட்டத்தட்ட ராஜினாமா மூடுக்குப் போய்விட்டார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். இதை முன்வைத்துத்தான் அவர் திடீரென்று தனது காரிலிருந்த தேசியக்கொடியையும் கழற்றினாராம். ஆனாலும், இதை பன்னீரின் வழக்கமான பூச்சாண்டி காட்டும் வேலையாகவே பார்த்தது எடப்பாடியின் முகாம்.


முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஆகியோரிடம் பன்னீர், “இதே நிலைமை தொடர்ந்தால், நம் சமூகத்தைச் சேர்ந்தவர்களை கட்சியில் ஒட்டுமொத்தமாக புறக்கணித்துவிடுவார்கள். இப்போதே கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சமூகத்தினரின் ஆதிக்கம் அதிகம் இருக்கிறது. நமது ஆட்களுக்குக் கட்சியில் பொறுப்பு கொடுக்க வேண்டும் என்று நான் நினைத்தால் எதுவும் நடப்பதில்லை. ஆனால், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி சொல்கிறவர்களுக்கு மட்டும் பதவிகள் தரப்படுகின்றன. நான் கட்சியிலிருந்து என்ன பயன்?” என்று வெடித்தாராம்.

ஆனால், என்ன நடந்தாலும் கட்சியையும் ஆட்சியையும் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை எடப்பாடி தரப்பு. ‘கட்சிக்கு நான்... ஆட்சிக்கு நீங்கள்’ என்கிற பன்னீர் கோரிக்கையின் பின்விளைவுகளை அறிந்தேயிருக்கிறாராம் எடப்பாடி. இடைப்பட்ட நாள்களில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி பன்னீர் பக்கம் லேசாகச் சாய்ந்த வைத்திலிங்கம் வரைக்குமே பலரது மனதைக் கரைத்திருக்கிறது எடப்பாடி தரப்பு.


முன்னாள் அமைச்சரான மணிகண்டனிடம் ஒரு டீம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது. செயற்குழுவில் பன்னீருக்கு ஆதரவாக எழுந்த குரல்கள், அக்டோபர் 7-ம் தேதி எழுந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறார் எடப்பாடி. முதல்வர் வேட்பாளர், கட்சியின் பொதுச்செயலாளர் இரண்டும் தன் கையில் இருந்தால்தான் கட்சி தனது முழுக் கட்டுப்பாட்டிலிருக்கும் என்பது எடப்பாடியின் எண்ணம்.

“ரெண்டு மாசத்துல ஆட்சி கவிழ்ந்துடும்னு சொன்ன ஆட்சியை, மூன்றரை வருஷத்துக்கு மேல சிறப்பா நடத்திக்கிட்டிருக்கேன். நான் மட்டும் ஆட்சியை கைவிட்டிருந்தேன்னா, உங்க நிலைமை என்ன ஆகியிருக்கும்... அதுவுமில்லாம உங்களுக்கு என்ன குறைவெச்சேன்... அம்மா இருந்தப்போ மாசா மாசம் கணக்கு கேட்பாங்க. அதெல்லாம்கூட நான் கேட்குறதில்லை. இதுதான் எனக்கு நீங்க காட்டுற விசுவாசமா?” என்று அமைச்சர்களிடம் பொங்கிய எடப்பாடி, சில எம்.எல்.ஏ-க்களிடம் போனைப் போட்டு, “யப்பா... உனக்கு வர வேண்டியதெல்லாம் வந்துக்கிட்டுதானே இருக்கு... பிறகென்ன அந்தாளோட பேச்சு... எனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு நெனைச்சிட்டியா?” என்றெல்லாம் கொந்தளித்தாராம். இதற்கிடையே அமைச்சர்கள் வேலுமணியும் தங்கமணியும் ஒவ்வொரு மாவட்டச் செயலாளருக்கும் போனைப் போட்டு எடப்பாடிக்காக ‘வெயிட்’டாகப் பேசிவருகிறார்கள்.

`அ.தி.மு.க - அ.ம.மு.க இணைப்புக்காகவே தினகரன் கடந்த வாரம் டெல்லியில் பா.ஜ.க தலைவர்களைச் சந்தித்தார்’ என்கிறார்கள். இது தொடர்பாக பன்னீர்-தினகரன் இடையே உடன்பாடும் ஏற்பட்டுவிட்டதாம். ஆனால், கட்சியின் தலைமைப் பதவி தனக்கு வேண்டும் என்பது பன்னீரின் கோரிக்கை. இது குறித்து பெங்களூரு சிறையிலிருக்கும் சசிகலாவுக்கு தகவல் அனுப்பி ஆலோசிக்கப்பட்டும் விட்டதாம். சசியும் இதற்கு பச்சைக்கொடி காட்டிவிட்டார் என்கிறது தினகரன் முகாம்.


Edum Edappadi's hand! Sasikala showed the green flag to the office!


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


பாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்!


மூன்றே மாதத்தில் கசந்த வனிதாவின் 4 வது திருமணம் ?


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp