பிக்பாஸ் 4 புதிய போட்டியாளர்கள் !

Views : 360

கடந்த 3 ஆண்டுகளாக தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தால் நிகழ்ச்சி நடைபெறாது என்று பலரும் நினைத்திருந்த நிலையில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பிக்பாஸ் 4 நிகழ்ச்சி தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

பிக்பாஸ் 4 நிகழ்ச்சி உறுதியானதில் இருந்தே இந்தமுறை யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்து கொள்வார்கள் என பார்வையாளர்களும் சினிமா செய்தியாளர்களும் யூகிக்கத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் துவக்கவிழாவை ஒளிபரப்புகிறது விஜய் டிவி. அதில் போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு கமல்ஹாசனின் வாழ்த்துடன் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைக்கப்படுவார்கள்.

இந்த 12 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொள்ள இருப்பவர் சோம் சேகர். பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்ட முக்கிய முகேனை போலவே இவரும் மாடலிங், ஆல்பம் பாடல்கள் உள்ளிட்டவைகளில் நடித்துள்ளார்.

இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் இவர்தான் அடுத்த முகேன் என சொல்லி வருகின்றனர்.



அதற்கான ப்ரமோ வீடியோவை நிகழ்ச்சிக்குழு சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் கருப்பு உடையில் ஸ்டைலாக தோன்றியிருக்கிறார் கமல்ஹாசன். மேலும் புதிய வாழ்க்கை, புதிய எதார்த்தம், புதிய துவக்கம் என்று மூன்று வார்த்தைகளை வசனமாக பேசியுள்ளார் கமல்ஹாசன்.

முதல்நாளான இன்று மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சி நாளையிலிருந்து இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு முறையும் சர்ச்சை, பரபரப்பு உள்ளிட்டவற்றிற்கு பஞ்சமில்லாமல் இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த முறை எப்படி இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.






Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


அதிமுக பொதுச்செயலாளர் பதவி சசிகலா வசம்! முதல்வர் பதவியில் எடப்பாடி!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp