ஒபிஎஸ் ட்விட்டால் அதிமுகவில் பரபரப்பு!

Views : 418

அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற போட்டி நிலவிவரும் நிலையில் தொண்டர்களின் முடிவை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக்கு வரும் அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தலுக்கான பணிகள் அனைத்து கட்சிகளும் ஈடுபடத் தொடங்கியுள்ளன. இதில் தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான திமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது கிட்டத்தட்ட உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில் ஆளும் கட்சியான அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்வி அக்கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.
இதில் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்துக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது. இதனிடையே இந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வரும் 7-ந் தேதி முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளதாக செயற்குழு கூட்டத்திற்கு பின் கே.பி.முனுசாமி அறிவித்திருந்தார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், தனது ஆதரவாளர்களுடன் ஓ பன்னீர்செல்வம் கடந்த 2 தினங்களாக ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் திடீரென துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஒரு ட்விட்டை பதிவு செய்துள்ளார். அதில் தமிழக மக்கள் மற்றும் அதிமுக கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது, எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் என பதிவிட்டுள்ளார்.


Excitement over OBS tweet!


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


பாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp