கொள்ளையடிக்கவே ஓன்று சேர்ந்துள்ளனர் ஓபிஸ் இபிஸ் : மு.க ஸ்டாலின் தாக்கு

Views : 82

"எப்போது யார் காலை யார் வாரலாம் எனக் காத்திருப்பவர்கள் தற்போது ஒன்றுகூடி இருப்பது மக்களுக்காக அல்ல கூட்டுச் சேர்ந்து கொள்ளையடிக்க, இந்தக் கொள்ளைக் கூட்டத்தைக் கோட்டையில் இருந்து விரட்டுவோம்" என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எப்போது யார் காலை வாருவார்கள் என்ற பயத்திலேயே ஆட்சி ஓடுகிறது. பன்னீர்செல்வமாக இருந்தாலும் பழனிசாமியாக இருந்தாலும் காலில் விழுந்து பதவியை வாங்கியவர்கள் என்பதால் ஒருவர் காலை இன்னொருவர் வாருவது அவர்களது பிறவிக்குணமாக ஆகிவிட்டது.

'ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது, விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும். அந்த விசாரணைக் கமிஷனில் முதல் ஆளாக அமைச்சர் விஜயபாஸ்கரை விசாரிக்க வேண்டும் என்று சொன்னவர் பன்னீர்செல்வம். அவரே விசாரணைக் கமிஷனுக்கு போகவில்லை.

அமைச்சர் சி.வி.சண்முகம் என்ன சொன்னார்?எப்போதும் நிறுத்தி நிதானமாகப் பேசக் கூடியவர். "பன்னீர்செல்வம் தன் மீதான ஊழல் புகார்களுக்குப் பதில் சொல்ல வேண்டும். சேகர் ரெட்டியை அறிமுகப்படுத்தியதே ஓ.பி.எஸ்.தான். ஜெயலலிதா சிறையில் இருக்கும் போது சேகர் ரெட்டிக்கு பதவி போட்டுக் கொடுத்தது பன்னீர்செல்வம்தான்'' என்று பேசியவர் அமைச்சர் சி.வி.சண்முகம்.


இன்று நடப்பது ஆட்சியல்ல; வீழ்ச்சி. இந்த வேதனையாட்சி விரைவில் முடிவுக்கு வரவேண்டும். இந்த வீழ்ச்சி விரைந்து தடுக்கப்பட வேண்டும். அதற்கான பிரச்சாரப் பணியை நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். இத்தகைய கொள்ளைக் கூட்டத்தைக் கோட்டையை விட்டு வெளியேற்றும் ஜனநாயகப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்போம்'' என்று பதிவிட்டுள்ளார்.
Opis Ibis: MK Stalin's attack


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


பாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp