செல்போனுக்கு தாலிகட்டிய மணமகன்,விந்தையான முறையில் திருமணம்!

Views : 173

கொரோனா காலத்தில் விந்தையான முறையில் திருமணங்கள் நடப்பது அதிகரித்துள்ளது. அவ்வகையில் மணமகன் செல்போனுக்கு தாலிகட்டிய சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது.

உலகம் முழுக்க பல்வேறு துறைகளை பாதித்த கொரோனா ஆயிரம் காலத்து பயிர் எனப்படும் திருமணங்களையும் விட்டு வைக்கவில்லை. ஏற்கனவே நிச்சயித்த திருமணங்களை மட்டும் சிலர் எளிமையாக நடத்தி வருகின்றனர். சிலர் ஒரு படி மேலே போய் விந்தையான முறையில் மணம்புரிகின்றனர், அவ்வகையில், கேரளாவில் மணப்பெண்ணை தொட்டு தாலி கட்டாமலேயே செல்போனில் திருமணமும் நடந்துள்ளது.

கேரள மாநிலம் கோட்டயத்தை அடுத்த கங்கனசேரியைச் சேர்ந்த வங்கி ஊழியர் ஸ்ரீஜித் நடேசனுக்கும், ஐடி ஊழியர் அஞ்சனாவுக்கும் கடந்தாண்டு நவம்பர் 9-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஏப்ரல் 26ல் திருமணம் செய்ய முடிவெடுக்கப்பட்டது.


ஆனால் உத்தரபிரதேசத்தில் பணியாற்றி வந்த மணப்பெண் கேரளாவுக்கு திரும்ப முடியவில்லை. அதனால் வாட்ஸ் ஆப் வீடியோ கால் மூலம் திருமணம் நடத்த முடிவெடுத்து சுபமாக நடந்து முடிந்துள்ளது.

செல்போன் திரையில் தோன்றிய மணமகள் அஞ்சனாவுக்கு மாப்பிள்ளை ஸ்ரீஜித் தாலி கட்டினார். மறுமுனையில் இருந்த மணமகள் அஞ்சனா தனக்கு தானே தாலி கட்டிக்கொண்டார். 26ம் தேதி திருமணம் நடந்த நிலையில் இருவரும் அவரவர் தங்கியுள்ள பகுதிகளிலேயே வசித்து வருகின்றனர்.

ஊரடங்கால் செல்போனுக்கு தாலி கட்டிய விந்தையான சம்பவம் கேரளாவில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


பாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp