போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் கைது!

Views : 3307

சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் மீது காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுப்பிடித்துவிட்டதாக யாராவது போலி தகவல் பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தணிகாச்சலம் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதை பாருங்கள்.

COVID-19 எனும் கொரோனா வைரஸ் குறித்து வாட்ஸ் அப், முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் பொது சுகாதாரத்துறை இயக்குநர், மருத்துவ இயக்குநர் அல்லது ஊரக மருத்துவம், சுகாதாரம் பணிகள் இயக்குநர் அல்லது மாவட்ட ஆட்சியர் அனுமதி இன்றி தகவல் பரப்புதல் The Epedemic Diseases Act and Regulations பிரிவு 8-ன் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில் மேற்கண்ட வைரஸுக்கு மருந்து கண்டுப்பிடித்துவிட்டதாக மத்திய மற்றும் மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்படாத மருத்துவக் கல்வித் தகுதியோ, முறையான அங்கீகாரமோ, பதிவோ இல்லாத சென்னை, ஜெய்நகர், கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள ரத்னா சித்த மருத்துவமனையின் போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் என்பவர் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக ஊடகங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கை மூலம் தவறான செய்தியை பரப்பிவிட்டு வருகிறார்.

பொது மக்களின் நலனுக்கு ஆபத்து ஏற்படும் விதத்தில் அவர் செயல்பட்டு வருவதால், அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி இயக்குநர், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை அவர்களால் சென்னை காவல்துறையிடன் புகார் அளிக்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


பாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp