என் சமையலையாவது நேரத்துல முடிச்சிருப்பேன்.. பிரதமர் மோடி பேச்சை கிண்டலடித்த குஷ்பு!

Views : 608

பிரதமர் மோடியின் பேச்சால் நேரம்தான் வீணானது என விமர்சித்த பிரபல நடிகையை வலைதள வாசிகள் வச்சு செய்து வருகின்றனர்.

கொரோனா வைரஸின் தாக்கத்தால் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் இந்தியாவில் மூன்று கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு உத்தரவும் வரும் 17 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு மக்களிடையே தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது கொரோனா வைரஸின் பாதிப்பு மக்களுக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்தது என்றார்.

மோடியின் பேச்சுக்கு குறித்து சமூக வலைதளங்களில் பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு பிரதமர் மோடியின் பேச்சு குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

8 மணி.. என்னாச்சு.. வெறும் காத்துதான் வந்துச்சு.. ஃப்யூ.. என ஊதியிருக்கிறார் குஷ்பு. மேலும் 20 லட்சம் கோடி பேக்கேஜ்... வங்கிகளை ஏமாற்றிய நண்பர்களிடம் இருந்து 68000 கோடி ரூபாயை திரும்பப் பெறுவது எப்படி என்று கேட்டிருக்கிறார்.

மேலும் ஒரு டிவிட்டில் போங்கடா.. என் சமையலையாவது நேரத்துல முடிச்சிருப்பேன்.. டைம் வீணா போச்சு என தெரிவித்திருக்கிறார் குஷ்பு. குஷ்புவின் இந்த டிவிட்டுகளுக்கு சிலர் ஆதரவு தெரிவித்திருந்தாலும் பெரும்பாலான நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.






Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


அதிமுக பொதுச்செயலாளர் பதவி சசிகலா வசம்! முதல்வர் பதவியில் எடப்பாடி!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp