அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது ரஜினியின் ‘அண்ணாத்த’

Views : 260

ரஜினி நடிப்பில் உருவாகிவரும் ‘அண்ணாத்த’ படம், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘தர்பார்’ படத்துக்குப் பிறகு ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். சிவா இயக்கிவரும் இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். இது, ரஜினியின் 168-வது படமாகும். வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, டி.இமான் இசையமைக்கிறார். நயன்தாரா ரஜினி ஜோடியாக நடிக்க, ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ், வேல ராமமூர்த்தி என ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். கடந்த வருட இறுதியில் படப்பிடிப்பு தொடங்கியது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் 19ஆம் தேதி முதல் அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன. மறுபடி எப்போது படப்பிடிப்பு தொடங்கலாம் என அரசு இதுவரை அறிவிக்கவில்லை. போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கு மட்டுமே நேற்று (மே 11) முதல் அனுமதி அளிக்கப்பட்டது. நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் தேதிகள், படப்பிடிப்புத் தளங்கள் என எல்லாவற்றையும் மறுபடியும் திட்டமிட வேண்டியிருப்பதால், ‘அண்ணாத்த’ படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 2019ஆம் ஆண்டு பொங்கலுக்கு ‘பேட்ட’ படமும், 2020ஆம் ஆண்டு பொங்கலுக்கு ‘தர்பார்’ படமும் ரஜினி நடிப்பில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ரஜினிகாந்த் இப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்றும் அதனை கமல்ஹாசன் தயாரிக்கிறார் என்றும் தகவல் வெளியானது. எனினும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்ணாத்த படத்தின் பணிகள் முடிந்த பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


பாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp