இப்போ தெரியுதா ஜெயலலிதா வாரிசு யாருன்னு: கெத்து காட்டும் ஜெ.தீபா!

Views : 370

அதிமுகவின் பொதுச் செயலளராகவும், தமிழகத்தின் முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வாரிசு இல்லாததால் சட்டப்படி அவருக்கு வாரிசு யார் என கேள்வி எழுந்தது. அத்துடன் அவரது ரூ.913 கோடி சொத்துகள், அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லம் உள்ளிட்டவைகள் யார் வசம் செல்லும் என்பது குறித்தும் பரவலாக பேசப்பட்டது.இதையடுத்து, ஜெயலலிதாவின் சகோதரர் பிள்ளைகளான தீபா, தீபக் ஆகியோர் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளாக தங்களை அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அதேபோல், ஜெயலலிதாவின் ரூ.913 கோடி சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரி அதிமுகவை சேர்ந்த புகழேந்தி, ஜானகிராமன் ஆகியோரும் வழக்கு தொடர்ந்தனர்.

இது ஒருபுறமிருக்க, ஜெயலலிதா வசித்த போயஸ் தோட்டம் இல்லத்தை நினைவு இல்லமாக அறிவித்து, நிலத்தைக் கையகப்படுத்துவதற்காக அவசரச் சட்டம் ஒன்றை தமிழக அரசு பிறப்பித்தது.


இந்த நிலையில், ஜெயலலிதாவின் வாரிசுகள், அவரது சொத்தை நிர்வகிப்பது யார் என்பது தொடர்பான வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் இன்று வழங்கியது. அதன்படி, ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசு இல்லாததால் இந்திய வாரிசுரிமை சட்டப்படி, அவரது உறவினர்களான தீபா, தீபக் ஆகியோரை சட்டப்பூர்வமான இரண்டாம் நிலை வாரிசுகளாக உயர் நீதிமன்றம் அறிவித்தது.


அத்துடன், ஜெயலலிதா போயஸ் தோட்டம் இல்லத்தை முழுமையாக நினைவு இல்லமாக மாற்றும் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்த உயர் நீதிமன்றம், ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டம் இல்லத்தின் ஒரு பகுதியை மட்டும் நினைவு இல்லமாக மாற்றலாம் என கருத்து தெரிவித்ததுடன், அதனை முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமாக ஏன் மாற்ற கூடாது எனவும் கேள்வி எழுப்பியது. இதுதொடர்பாக 8 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என வரவேற்பு தெரிவித்துள்ள
ஜெ.தீபா, ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு வாரிசு யார் என்ற கேள்விக்கு நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு நாங்களே வாரிசு என்பது இதன் மூலம் உறுதியாகி உள்ளது. அவரது சொத்துகள், நம்பிக்கையை பாதுகாக்கும் கடமை எங்களுக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


பாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp