ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!

Views : 15092

எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல், ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல் என்று நடிகர் ராஜ்கிரண் தெரிவித்துள்ளார். தமிழில் கஸ்தூரி ராஜா இயக்கிய என் ராசாவின் மனசிலே என்ற படம் ஹீரோவாக அறிமுகமானவர் ராஜ்கிரண்.

1991 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் அவர் ஜோடியாக, மீனா நடித்திருந்தார். ரவிச்சந்தர், சாரதா பிரீதா, கவுண்டமணி, செந்தில் உட்பட பலர் நடித்திருந்தனர்.

சூப்பர் டூப்பர் ஹிட்டான இந்தப் படத்தில்தான், வடிவேலு நடிகராக அறிமுகமானார். இளையராஜ இசை அமைத்திருந்த இந்தப் படத்தை ராஜ்கிரண், தனது ரெட் சன் ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் மூலம் தயாரித்திருந்தார். இதன் பாடல்கள் செம ஹிட். அடுத்து அரண்மனைக் கிளி என்ற படத்தை தானே தயாரித்து, இயக்கி நடித்தார்.

இந்தப் படத்தில் அஹானா, காயத்ரி, சங்கிலி முருகன் உட்பட பலர் நடித்திருந்தன. இந்தப் படமும் ஹிட்டானது. இதையடுத்து எல்லாமே என் ராசாதான் என்ற படத்தை தயாரித்து இயக்கினார். சங்கீதா, ரூபாஶ்ரீ நடித்த இந்தப் படமும் வரவேற்பைப் பெற்றது. 90-களில் ரஜினி, கமலை விட அதிக சம்பளம் வாங்கியவராக இருந்த ராஜ்கிரண், தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் முக்கியமான வேடங்களில் நடித்து வருகிறார்.

கார்த்தியின் கொம்பன், தனுஷின் பா பாண்டி, விஷாலின் சண்டக்கோழி 2 ஆகிய படங்களில் சமீபத்தில் நடித்துள்ள ராஜ்கிரண், அடுத்து குபேரன் என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் மம்மூட்டி, மீனா, சித்திக், ஜான் விஜய் உட்பட பலர் நடித்துள்ளனர். இதற்கிடையே, இன்ஸ்டாகிராமில் அடிக்கடி பதிவுகளை எழுதி வரும் நடிகர் ராஜ்கிரண், இப்போது தனது மனைவி பத்மஜோதியின் பிறந்த நாள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர், எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல், ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்...இறை அருளால், என் காதல் மனைவிக்கு பிறந்த நாளான இன்று, இறைவனிடம், இரு கரங்கள் ஏந்தி அழுது, மன்றாடி, என் மனைவி எல்லா மேன்மைகளையும் பெற்று, வாழ்வாங்கு வாழ பிரார்த்தித்து, என்னில் பாதியாகி, என்னுள்ளே தானுமாகிய என்னவளை வாழ்த்துகிறேன்... வாழ்க வாழ்க. உங்கள் அனைவரின் வாழ்த்துக்களையும் வேண்டி, ஈருடல் ஓருயிராகிய நாங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். ரசிகர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


பாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


அரைநிர்வாண உடலில் சிறுவர்களை வைத்து சித்திரம் வரைந்த சபரிமலையில் தடையை மீறி நுழைய முயன்ற ரெஹனா பாத்திமா!


Click here to Share on WhatsApp