10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!

Views : 63207

அரசு வேலை வாங்கி தருவதாக சொல்லி, லட்சக்கணக்கில் மோசடியும் செய்து, அந்த பணத்தில் 10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக இருந்துள்ளார் போலி ஐஏஎஸ் அதிகாரி ஒருவர்.. தற்போது அவரை ராமநாதபுரம் போலீசார் தூக்கி உள்ளே வைத்துள்ளனர்!


ராமநாதபுரத்தை சேர்ந்த தம்பதி தனராஜ் - டெய்சி.. இருவருமே ஆசிரியர்களாக பணியாற்றி ரிடையர் ஆனவர்கள்.. இவர்களது மகன் சைமன்.. ஆந்திராவில் ஒரு மெடிக்கல் காலேஜில் பேராசிரியாக வேலை பார்த்து வருகிறார். டெய்சிக்கு ஜார்ஜ் பிலிப் என்பவர் அறிமுகமாகி உள்ளார்.. இவர் சென்னையில் உள்ள சுகாதாரத்துறையில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.

அரசு பணியில் இருப்பதால், டிஎன்பிஎஸ்சியில் வேலை பார்த்து வரும் நவாப்பன் உள்ளிட்டோரை நன்றாக தெரியும், அவர்கள் மூலமாக நிறைய பேருக்கு அரசு வேலை வாங்கி தந்துள்ளதாக டெய்சியிடம் சொலி உள்ளார். இதைகேட்ட டெய்சியும் தன்னுடைய மருமகன், சகோதரியின் மகன், உறவினர் உட்பட 3 பேருக்கு அரசு வேலை வாங்கி தர முடியுமா என்று கேட்டுள்ளார்.

அதற்கு ஜார்ஜ்-ம் சரியென்று சொல்லி, ஆளுக்கு 5 லட்சம், அதாவது 3 பேருக்கும் 15 லட்சம் ரூபாய் வேண்டும் என்று கேட்டுள்ளார்... ஒரு கையில் பணம், மறுகையில் அப்பாய்ண்ட்மென்ட் ஆர்டர் தருவதாகவும் நம்பவைத்தார். அதன்படியே டெய்சியும், பணமும், சர்டிபிகேட்டுகளும் தயார் செய்து காத்திருந்தபோது, ஜார்ஜும், நவாப்பனும் ஒரு காரில் அதிகாரிகள் கெட்டப்பில் சென்றனர்.

சுழல் விளக்கு ஜீப்பில் இருவரும் இறங்கி வருவதை பார்த்த டெய்சியும் அச்சு அசல் உயர் அதிகாரிகள் என்றே நம்பி பணத்தையும் தந்தார்.. பணி நியமன ஆணை எங்கே என்று கேட்டபோது, 2 பேருமே தாங்கள் வந்த ஜீப்பிலேயே எஸ்கேப் ஆகி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த டெய்சி, போலீசாருக்கு உடனே புகார் சொன்னார்.. இதையடுத்து, மாவட்டம் முழுதும் தீவிர கண்காணிப்பு நடத்தப்பட்டது.. அப்போதுதான் எஸ்பி பட்டினம் பகுதியில் ஜார்ஜ், நவாப்பனை கைது செய்தனர்.

விசாரணையில், அவர்கள் நாவப்பன் செங்கம் பகுதியை சார்ந்தவர் என்பதும், போலி ஐஏஎஸ் அதிகாரி போல வேஷமிட்டதும் தெரியவந்தது. உயர் அதிகாரிகள் என்று போலி ஐடி, விசிட்டிங் கார்டுகளை காண்பித்தே பலரை நாவப்பன் மோசடி செய்ததும் தெரியவந்தது... இவருக்கு செங்கத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர்தான் மோசடிக்கு உதவி உள்ளார்.. இந்த மோசடி பணத்தை வைத்து கொண்டு, இவர்கள் ஜாலியான வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர்.. 10-க்கும் மேற்பட்ட துணை நடிகைகள், சின்னத்திரை நடிகைகளுடன் உல்லாசமாக இருந்துள்ளனர்.

அந்த போட்டோக்கள் எல்லாம் அவர்களது ஸ்மார்ட் போனில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.. சினிமா படம் எடுக்க போகிறோம் என்று சொல்லியே அந்த நடிகைகளை வலையில் விழ வைத்துள்ளனர்.. கிட்டதட்ட 50-க்கும் மேற்பட்டோரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக இவர்கள் ஏமாற்றி பணம் பறித்துள்ளது இப்போதைக்கு தெரியவந்துள்ளது.. கைதானவர்களிடம் தொடர் விசாரணையும் நடந்து வருகிறது.


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


பாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


அரைநிர்வாண உடலில் சிறுவர்களை வைத்து சித்திரம் வரைந்த சபரிமலையில் தடையை மீறி நுழைய முயன்ற ரெஹனா பாத்திமா!


Click here to Share on WhatsApp