துணியெல்லாம் ரத்தம்.. ஓடும் காரிலேயே 20 வயது பெண்ணை.. கதற கதற.. தஞ்சை ஷாக்!

Views : 265

உடம்பெல்லாம் ரத்த காயங்களுடன் இளம்பெண் ரோட்டில் வீழ்ந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. தஞ்சையில் ஓடும் காரிலேயே இந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர் என்று மாதர் சங்கம் சார்பில் பகிரங்கமாக குற்றஞ்சாட்டப்படுகிறது! த

ஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள சானூரப்பட்டி கடைவீதி அருகே ஒரு பெண் ரோட்டில் விழுந்து கிடந்திருக்கிறார்.. அவரது துணியெல்லாம் கிழிந்து கிடந்தது.. உடலில் ரத்த காயங்களும் ஏராளமாக இருந்தன.. பார்ப்பதற்கு வடநாட்டை சேர்ந்த பெண் போலவே இருந்துள்ளார்.

இதனை பார்த்த மாதர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகளும், செங்கிப்பட்டி போலீசாரும் அந்த பெண்ணை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.. முதலுதவி சிகிச்சை பெண்ணுக்கு உடனடியாக தரப்பட்டது. அதன்பிறகு மாதர் சங்கத்தினர் அந்த பெண்ணிடம் யார், என்ன என்று விசாரித்தனர். அந்த பெண்ணுக்கு தமிழ் தெரியவில்லை.. இந்தியில்தான் பேசுகிறார் என்பதால், இந்தி தெரிந்தவர்களை வைத்துதான் அவரிடம் பேச வைத்துள்ளனர்.

அப்போதுதான் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாயின.. சம்பந்தப்பட்ட பெண் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்.. பெங்களூருவில் குடும்பத்தினருடன் தங்கி இருந்துள்ளார்... அப்போது அங்கிருந்து அவரை தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள ஒரு வீட்டிற்கு, வீட்டு வேலைக்காக ஒருவர் அழைத்து சென்றிருக்கிறார்.. 5 மாதமாக அந்த வீட்டில்தான் பெண் வேலை பார்த்து வந்துள்ளார்.

ஆனால், அந்த வீட்டு உரிமையாளரும், அவரது மனைவியும் பெண்ணை ஏராளமான வழிகளில் துன்புறுத்தியும், கொடுமைப்படுத்தியும் வந்துள்ளனர்.. பாலியல் தொந்தரவும் தந்துள்ளனர்.. நேற்று அவர்கள்தான் ஒரு காரில் 4 பேர் அந்த பெண்ணை ஏற்றி கொண்டு, வழியெல்லாம் அடித்து உதைத்தபடியே வந்துள்ளனர்.. செங்கிப்பட்டி அருகே பூதலூர் பிரிவு சாலை அருகே ஓடும் காரில் இருந்தே பெண்ணை வீசி விட்டு சென்றனர்" என்று தெரியவந்துள்ளது. வயிற்றை பிடித்து கொண்டே அழுதவாறே இந்த தகவல்களை பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.

அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், அந்த பெண்ணை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என்று மாதர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் என்றும் அந்த பெண் தங்கி இருந்த வீட்டின் ஓனர் யார் என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் மாதர் சங்கத்தினர் வலுவான வேண்டுகோளை வைத்து வருகின்றனர்.

அந்த வீட்டில் இருந்த அத்தனை பேருமே அடித்து கட்டாயப்படுத்திதான் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்கள் என்று செங்கிப்பட்டி போலீசாரிடம் புகாரும் அளித்துள்ளனர். இதையடுத்து, அந்த புகாரின்பேரில் விசாரணை நடந்து வருகிறது.. அதேபோல, ரத்த காயங்களுடன் காரில் இருந்து இளம்பெண் தூக்கி வீசப்பட்டதும் அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியும் உள்ளது. மேலும் பகல் நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதால் விரைவில் குற்றவாளிகளை பிடித்துவிடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர் போலீசார்!


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


அதிமுக பொதுச்செயலாளர் பதவி சசிகலா வசம்! முதல்வர் பதவியில் எடப்பாடி!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp