மேனகாவுக்கு முஸ்லிம் லீக் நோட்டீஸ்! யானை கொல்லப்பட்டது பாலக்காட்டில், மலப்புரத்தை விமர்சித்தது ஏன்?

Views : 390


கேரளாவில் கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட சம்பவம், இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . இந்த சம்பவம் மலப்புரம் மாவட்டத்தில் நடந்ததாக முதலில் செய்திகள் வெளியாகின. ஆனால், யானை கொல்லப்பட்டது பாலக்காடு மாவட்டத்திலுள்ள சைலன்ட் வேலி பகுதியில் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.


யானை கொல்லப்பட்ட சம்பவம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும் பாரதிய ஜனதா எம். பியுமான மேனகா காந்தி கூறுகையில், ' கேரளாவில் மூன்று நாளைக்கு ஒரு யானை கொல்லப்படுகிறது, மலப்புரத்தில் சாலைகளில் விஷம் கலந்த உணவு வைக்கின்றனர். விஷத்தை சாப்பிட்டு ஒரே நேரத்தில் 300,400 பறவைகள் , நாய்கள் இறந்துள்ளன. இந்தியாவில் மிக மோசமாக வன்முறை நடக்கும் மாவட்டமாக மலப்புரம் உள்ளது' என்று விமர்சித்திருந்தார்.


மேனகா காந்தியின் இந்த கருத்து, மலப்புரம் மாவட்ட மக்களை கடும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது. இந்த மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேனகாகாந்தியின் கருத்துக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கே.பி.ஏ மஜீத் , ' மலப்புரம் மக்களை மேனகா காந்தி அவமதித்து விட்டார். இதற்காக, அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். எங்கள் கட்சி சார்பில் மேனகா காந்திக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளோம் ' என தெரிவித்துள்ளார்.


கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் யானை கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். ' யானை கொல்லப்பட்ட சம்பவம் மிகுந்த வேதனையை தருகிறது. பாலக்காடு மாவட்டத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ள நிலையில் .சிலர் மலப்புரம் மாவட்டத்தை குறி வைத்து வெறுப்புணர்ச்சியை தூண்டி வருகின்றனர். மலப்புரம் மற்றும் கேரளாவை அவமதிக்கும் வகையில் சிலர் வேண்டுமென்றே பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மேனகாகாந்தி உண்மை தெரியாமல் பேசியிருந்தால், அதை திருத்திக் கொள்கிறேன் என்று கூறி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம். ஆனால், அதற்கு அவர் தயாராக இல்லை. இதனால், அவரின் கருத்து உள்நோக்கம் கொண்டது ' என்று பினராயி விஜயன் கூறியுள்ளார்.


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


அதிமுக பொதுச்செயலாளர் பதவி சசிகலா வசம்! முதல்வர் பதவியில் எடப்பாடி!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp