கொரோனா தடுப்பூசி யார் போடலாம்? யார் போடக்கூடாது?

கொரோனா தடுப்பூசி யார் போடலாம்? யார் போடக்கூடாது?

Views : 2261

யாரெல்லாம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்… யாரெல்லாம் தடுப்பூசி போட்டுக்கொள்ளக் கூடாது என்பது குறித்த அரசின் வழிகாட்டுதல்களும் அறிவிப்புகளும் என்னென்ன? தற்போது பார்க்கலாம்..



கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்வது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பல்வேறு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி,

யாரெல்லாம் கொரோனா தடுப்பூசி போடக்கூடாது?

ஏற்கனவே தடுப்பூசி பெற்று அந்த மருந்தில் உள்ள வேதிப்பொருட்களால் ஒவ்வாமை ஏற்பட்டவர்கள்.
கர்ப்பிணிகள் – பாலூட்டும் தாய்மார்கள்
கடும் காய்ச்சல் மற்றும் தொற்று ஏற்பட்டிருப்பவர்கள்
18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளக் கூடாது.





யாரெல்லாம் கொரோனா தடுப்பூசி போடலாம்?

ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்ட 20 வகையான பாதிப்புக்கு சிகிச்சை பெறுபவர்கள், கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதய செயலிழப்புக்காக சிகிச்சை மேற்கொண்டவர்கள்.
இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள்.
இடது வெண்ட்ரிகுலார் செயலிழப்புக்காக சிகிச்சை மேற்கொண்டவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம்.
இதய குழாய் அடைப்புக்கு சிகிச்சை பெற்றவர்கள்.
பிறப்பிலேயே இதய குறைபாட்டுடன் பிறந்தவர்கள்.
நீரிழிவு சிகிச்சை, உயர்ரத்த அழுத்தம், ரத்தக்குழாயில் பெரியளவிலான பாதிப்பு உள்ளவர்களும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம்.
மார்பக வலி உள்ளவர்கள், பக்கவாதம் மற்றும் ரத்த அழுத்தம், 10 ஆண்டுகளாக நுரையீரல் தமணி ரத்த அழுத்தத்திற்காக சிகிச்சை எடுப்பவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம்.
10 ஆண்டுகளுக்கும் மேலாக நீரிழிவு சிகிச்சையில் உள்ளவர்கள்.
சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்பு சிகிச்சை பெற்றவர்கள்.
ஹீமோடையாலிசிஸ் செய்தவர்களும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம்
கல்லீரல் பாதிப்புக்காக சிகிச்சை, சுவாசக்குழாய் தொற்றுக்காக சிகிச்சை எடுத்தவர்களும் தடுப்பூசி போடலாம்.
தொண்டை புற்று, ரத்த புற்றுநோய், வெள்ளை அணுக்கள் பாதிப்பு, புற்றுநோய் சிகிச்சையில் உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
சிவப்பணுக்கள் குறைபாடு, ரத்த சோகை உள்ளவர்களும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம்
ஹெச்.ஐ.வி தொற்று உள்ளவர்கள், சிறப்பு குழந்தைகள், அமில வீச்சால் சுவாச மண்டலம் பாதிக்கப்பட்டவர்களுடன் வலி மற்றும் வீக்கத்தை குறைக்க மருந்து எடுப்பவர்களும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம்
தேவைப்பட்டால் மருத்துவரின் ஆலோசனை பெற்று தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




JOIN IN TELEGRAM

ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழன்.! அதிமுகவில் இணைந்த 15 நாட்களில் நெல்லை வேட்பாளர்!

Mar 21, 2024 - 4 weeks ago
ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழன்.! அதிமுகவில் இணைந்த 15 நாட்களில் நெல்லை வேட்பாளர்! நாடாளுமன்ற தேர்தலில் நெல்லை தொகுதி வேட்பாளாராக சிம்லா முத்து சோழன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 15நாட்களுக்கு15நாட்களுக்கு முன்பாக திமுகவில் இருந்து அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை அதிமுக, திமுக அறிவித்துள்ளது. இதில் 18 தொகுதிகளில் திமுக - அதிமுக நேரடியாக களம் இறங்குகிறது. இதில்

நான் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது : டிடிவி தினகரன்

Apr 03, 2024 - 2 weeks ago
நான் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது : டிடிவி தினகரன் “ஜெயலலிதா மறைவுக்குப் பின் அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. நாம் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது” என்று அமமுக பொதுச்செயலாளரும் , தேனி பாராளுமன்ற அமமுக வேட்பாளருமாகிய டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரையில் பேசினார்.

“3வது முறையாக மோடி பிரதமராக வரவேண்டும். உலக நாடுகள் வியந்து பாராட்டும் அளவிற்கு இந்தியாவை முன்னேற்றிய

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது - அமலாக்கத்துறை அதிரடி

Mar 21, 2024 - 4 weeks ago
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது -  அமலாக்கத்துறை அதிரடி மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த நவம்பரில் இருந்து அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் அவற்றை நிராகரித்தார்.டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கில் அவருக்கு கடந்த 16-ம் தேதி ஜாமின் வழங்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில்